1. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதுக்கு எந்த மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?
(A) மதுரை
(B) கோவை
(C) சேலம்
(D) சென்னை
2. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறப்பாக செயல்படும் நகராட்சி விருதுக்கு எந்த நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?
(A) தருமபுரி
(B) வேதாரண்யம்
(C) அறந்தாங்கி
(D) இவை மூன்றும்
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான, முதலமைச்சர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக செயல்படும் நகராட்சி விருதுக்கு, தருமபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை
- மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில், சிறப்பாக செயல்படும் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பாக செயல்படும் முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே, 15 லட்சம், 10 லட்சம், மற்றும் 5 லட்சம் ரூபாய், என சான்றிதழுடன், ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை வருகிற சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் வழங்குவார் என்று, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
Answer
1. (C) சேலம்
2. (D) இவை மூன்றும்
No comments:
Post a Comment