சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. மொத்தம் பதினெட்டு நூல்கள் இவற்றை மேல் கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
சங்க நூல்களுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு பதினெண்கீழ்க்கணக்கு என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் 18 நூல்கள் உள்ளன.
பதினெண் என்றால் 18 என்று பொருள். இந்நூல்களை கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை அற (நீதி) நூல்கள் ஆகும்.
நீதி நூல்கள்
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4.இன்னா நாற்பது
5.இனியவை நாற்பது
6.திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8.சிறுபஞ்சமூலம்
9.பழமொழி
10.முதுமொழிக்காஞ்சி
11. ஏலாதி
அகத்திணை நூல்கள்
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6.கார் நாற்பது
புறத்திணை நூல்
1. களவழி நாற்பது
மொத்தம் 18 நூல்கள். இவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
நீதி நூல்களைப் பற்றி பார்க்கலாம்.
1. திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.
நூல் குறிப்பு
குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள். இது திரு என்னும் அடைமொழியை பெற்று திருக்குறளில் என வழங்கப்படுகிறது. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது.
அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், 4 இயல்களையும் கொண்டுள்ளது. .அவை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால் 70 அதிகாரங்களையும், 3 இயல்களையும் கொண்டுள்ளது. அவை அரசியல், அங்கவியல், ஒழிபியல்.
இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும், 2 இயல்களையும் கொண்டுள்ளது.
அவை களவியல், கற்பியல்.
மொத்தம் 133 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் இவரது காலம் கி.மு. 31 ஆம் நூற்றாண்டு.
பாவகை
குறள் வெண்பாக்களால் அமைந்த நூல்.
2. நாலடியார்
நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
நூல் குறிப்பு
இந்நூல் 400 பாடல்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நூல் அறக்கருத்துக்களை கூறுகிறது.
இந்நூலின் சிறப்பு பெயர் - நாலடி நானூறு
ஆசிரியர் குறிப்பு
சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலடியார் ஆகும்.
பாவகை
வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
சிறந்த தொடர்கள்
1. "செல்வம் சகடக்கால் போல வரும்"
2. "கல்வி கரையில கற்பவர் நாள்சில"
3. நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
நூல் குறிப்பு
கடிகை என்றால் அணிகலன் என்பது பொருளாகும். 4 மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள். ஒவ்வொரு பாட்டும் அறக்கருத்துகளை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார்
"விளம்பி" என்பது ஊர் பெயர்
"நாகனார்" என்பது புலவரின் இயற்பெயர்
பாவகை
103 வெண்பாக்களால் ஆன நூல் ஆகும்.
சிறந்த தொடர்கள்
1. "அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்"
2. "வெல்வது வேண்டின் வெகுளி விடல்"
3. "ஈன்றாளின் என்னக் கடவுளும் இல்"
4. இன்னா நாற்பது
இன்னா நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
ஒவ்வொரு கருத்தின் முடிவிலும் "இன்னா" எனக் கூறப்படுவதால் இன்னா நாற்பது என்றழைக்கப்படுகிறது.எவை எவை இன்னாதவை என ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கின்றன.
இந்நூல் அறக்கருத்துக்களை பற்றி கூறுகிறது. இந்நூலில் புலால்(இறைச்சி) உண்ணாமை, கள்ளுண்ணாமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் குறிப்பிடப்பட்டுள்ளன. பலராமனை சுட்டுதல் சங்க காலத்தை ஒட்டிய குறிப்பை நமக்கு வழங்குகிறது.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் கபிலர்
இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு
பாவகை
கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் இதில் உள்ளன.
சிறந்த தொடர்கள்
1. தீமையுடையார் அயலிருத்தல் இன்னா
2. ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்னின்னா
3. இன்னா ஈன்றாளை ஓம்பாவிடல்
4. அடைக்கலம் வவ்வுதல் இன்னா
5. இன்னா பொருளில்லார் வண்மை புரிவு
6. இன்னா மறையின்றிச் செய்யும் வினை
5. இனியவை நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
இனிய பொருட்களை பாடல்களில் தொகுத்து கூறப்பட்டுள்ளது. எனவே இது இனியவை நாற்பது என்றழைக்கப்படுகிறது.ஒவ்வொரு பாடலிலும் எவை எவை இனியவை என எடுத்துரைக்கின்றன.
மும்மூர்த்திகளை வணங்கும் கடவுள் வாழ்த்து இதில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
பாவகை
மும்மூர்த்திகளை வணங்கும் கடவுள் வாழ்த்துடன் இந்நூலில் 41 வெண்பாக்கள் உள்ளன.
சிறந்த தொடர்கள்
1. ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன்னினிது
2. கடமுண்டு வாழாமை காண்டலினிது
3. மான மழிந்தபின் வாழாமை முன்னினிது
4. வருவாயறிந்து வழங்கலினிது
5. குளவி தளர் நடைகாண்டலினிது
6. கயவரைக் கைகழிந்து வாழ்தலினிது
6. திரிகடுகம்
திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றினால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். இம்மருந்தை சாப்பிடுபவர்களின் உடல் நோயை நீக்கும். இதுபோலவே ஒவ்வொரு திரிகடுக பாடலிலும் இடம் பெற்றுள்ள மூன்று கருத்துக்களும் மக்களின் மனதில் உள்ள அறியாமை என்னும் நோயைப் போக்கி தெளிவை அளிக்கும்.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
பாவகை
திரிகடுகம் 101 வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிறந்த தொடர்கள்
1. நல்லவை செய்வாள் பெய்யெனப் பெய்யும் மழை
2. மக்கட் பெறலில் மனைக் கிழத்தி
3. பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
4. நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
5. தோள்பற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை
7. ஆசாரக்கோவை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
ஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது அடுக்கிக் கூறுதல். ஒழுக்க நெறிகளை பற்றியும் நாள்தோறும் நாம் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் பெருவாயின்முள்ளியார்.
பெருவாயின் என்பது ஊர் பெயர்.
பாவகை
இந்நூல் 100 வெண்பாக்களால் ஆன நூலாகும்.
சிறந்த தொடர்கள்
1. வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்துச் செய்தல் முந்தையோர் கண்டநெறி
2. ஓடும் நீரிலோ, குளம் போன்ற நிலைநீரிலோ வாய் கொப்பளித்துத் துப்பக்கூடாது. நீரைக் கலத்தில் முகந்து சென்று வாய் கொப்பளித்துத் ஊறக்கூடிய தரையில் துப்பவேண்டும்.
3. தனக்கென உலை ஏற்றாது, சமைத்த உணவை வழங்கி உண்ணவேண்டும்.
4. நீருக்குள்ளே தன் முகத்தைப் பார்க்கக் கூடாது.
8. சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களும் உடல் நோயை தீர்க்கும். இதைப் போன்று இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள 5 கருத்துக்கள் மக்கள் மன நோயை போக்கும். எனவே இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந்நூல் பெரும்பான்மையாக பொது அறம் கருத்துக்களையும் சிறுபான்மையாக சமண கருத்துகளையும் கொண்டுள்ளது.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் காரியாசான்.
இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவரும் கணிமேதாவியரும் ஒன்றாக படித்த மாணவர்கள் ஆவர்.
பாவகை
இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 97 வெண்பாக்களால் ஆனது.
சிறந்த தொடர்கள்
1. தானத்தால் போகம் தவத்தால் சுகம்சுகமா
ஞானத்தால் வீடாகும் நாட்டு.
2. தோற்கன்று காட்டி கறவார் கறந்தபால்
பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்.
9. பழமொழி
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாகக் கூறுவது பழமொழியாகும். பழமொழியை மூதுரை,முதுமொழி,உலக வசனம் எனவும் கூறுவர். மேலும் இதனை பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர். இந்நூல் தமிழ் அறிஞர்களால் நாலடியார்க்கு இணையாக மதிக்கப்படுகிறது.
இந்நூலில் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், மன இயல்பு போன்றவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் முன்றுறையரையனார்.
அறையன் என்பது அரசனைக் குறிக்கும். இவர் பாண்டிய நாட்டு முன்றுறை என்னும் ஊரை ஆட்சி புரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
பாவகை
இந்நூல் 400 வெண்பாக்களால் ஆன அறநூலாகும்.
சிறந்த தொடர்கள்
1. பாம்பறியும் பாம்பின் கால்
2. முள்ளினாள் முள் களையுமாறு
3. இறைத்தோறும் ஊறுங்கிணறு
4. ஆயிரங் காக்கைக் கோர்கல்
5. திங்களை நாய் குரைத்தன்று
10. முதுமொழிக்காஞ்சி
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்றாகும். இந்நூல் உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இந்நூல் அறவுரை கோவை எனவும் வழங்கப்படுகிறது. முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை உரைகளாகும் கூறுகிறது.
இந்நூலில் பத்து அதிகாரங்களும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து செய்யுள்களும் உள்ளன இன்னும் நூறு பாடல்களால் ஆனது.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் மதுரை கூடலூர் கிழார்.
கூடலூர் இவரது பிறந்த ஊராகும். இவர் சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.
பாவகை
இந்நூல் குறள் தாழிசையில் பத்துப் பத்துச் செய்யுள்களாக அடங்கிய பத்து பகுதிகளைக் கொண்டுள்ளது.
சிறந்த தொடர்கள்
1. ஈரம் இல்லாதது கிளை நட்பன்று
2. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
3. கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
4. நசையிற் சிறந்த நல்குர வில்லை
5. இன்பம் வேண்டுவோம் துன்பம் தண்டான்
11. ஏலாதி
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
நூல் குறிப்பு
இந்நூல் நான்கு அடிகளில் ஆறு அருங்கருத்துக்களை கொண்டுள்ளது. ஏலம் இன்னும் மருந்து பொருளை முதன்மையாகக் கொண்டு லவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்து பொருளுக்கு ஏலாதி என்பது பெயர். இம்மருந்து உண்பவரின் உடல் நோயினை போக்கும். இதுபோல இந்நூலில் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியர்.
இவருக்கு கணிமேதையர் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
பாவகை
இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
சிறந்த தொடர்கள்
1. ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கீந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து.
2. பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரீன்று சொல்லின்று மாறின்று சோர்வின்று
இடரின்று இனிதுயிலு மின்று
No comments:
Post a Comment