1. FMCG(Fast-Moving Consumer Goods) நிறுவன தலைவர்களில், அதிக ஊதியம் பெறுவோர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர்?
(A) விவேக் கம்பீர் (கோத்ரேஜ்)
(B) சஞ்சீவ் மேத்தா (ஹிந்துஸ்தான் யுனி லிவர்)
(C) சுரேஷ் நாராயணன் (நெஸ்லே)
(D) P.D.நாரங் (டாபர்)
FMCG(Fast-Moving Consumer Goods) நிறுவன தலைவர்களில், அதிக ஊதியம் பெறுவோர் பட்டியலில், கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் கம்பீர் முதலிடம் பிடித்துள்ளார்.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள் நிறுவனங்கள், FMCG என சுருங்க அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள, 2018-2019ஆம் நிதியாண்டுக்கான கணக்கின் அடிப்படையில், அவற்றின் தலைவர்களில், சம்பளம் மற்றும் இதர படிகளுடன், அதிக வருவாய் ஈட்டுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
- கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் கம்பீர், 20 கோடியே 9 லட்ச ரூபாய், ஊதியத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.
- ஹிந்துஸ்தான் யுனி லிவர் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா, 18 கோடியே 88 லட்ச ரூபாய் ஊதியத்துடன், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
- நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர் 11 கோடியே 9 லட்ச ரூபாய் ஊதியத்துடன் மூன்றாமிடமும்.
- டாபர் இந்தியா நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் P.D.நாரங் நான்காமிடமும் பிடித்துள்ளனர்.
- டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சுனில் துகல் ஐந்தாம் இடத்திலும்,
- மாரிகோ நிறுவனத்தின் செளகாதா குப்தா 6ஆம் இடத்திலும் உள்ளனர்.
Answer
1. (A) விவேக் கம்பீர் (கோத்ரேஜ்)
No comments:
Post a Comment