Breaking

Friday 14 June 2019

TNPSC அறிவிப்பு (14.06.2019) | குரூப் 4

TNPSC அறிவிப்பு



இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 2018-2019 மற்றும் 2019-2020 பணியிடங்களை நிரப்ப tnpsc அறிவிப்பினை 14.06.2019 வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள இடம் - 6,491 


பணிகளை பற்றிய விவரம் 
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார்நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலக பணி போன்றவை.

தகுதி : 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்.


வயதுவரம்பு : 01.07.2019 அன்று உள்ளபடி குறைந்தபட்ச வயது 18.அதிகபட்ச வயது 40. (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.)

தேர்வு செய்யப்படும் முறை 
எழுத்துத் தேர்வு, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்
ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100(ஒருமுறை பதிவு செய்த One-Time Registration ஐந்து வருடங்கள் வரை செல்லுபடியாகும்). மொத்தம் ரூபாய் 250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை 
என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.07.2019
 மேலும் தகவல்களுக்கு இந்த PDF ஐ காண்க.
TNPSC GROUP 4 NOTIFICATION

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491