1. Facebook Hall of Fame 2019 ல் சேர்க்கப்பட்ட Zonel Sougaijam எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
(A) மிசோரம்
(B) நாகாலாந்து
(C) மணிப்பூர்
(D) அருணாச்சல பிரதேசம்
ஒரு பயனரின் தனியுரிமையை மீறும் வாட்ஸ்அப் பிழையைக் கண்டறிந்ததற்காக மணிப்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் Zonel Sougaijam, பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 (Facebook Hall of Fame 2019) இல் சேர்க்கப்பட்டார். மேலும் இவருக்கு $5000 பணமும் வழங்கப்பட்டது.
இவரது பெயர் 16 வது இடத்தில் உள்ளது.மொத்தம் Facebook Hall of Fameல் இதுவரை 94 பேரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வழியாக ஒரு குரல் (Voice Call) அழைப்பின் போது, பெறுநரின் (Receiver) அங்கீகாரம் இல்லாமல் அழைப்பாளரை (Caller) வீடியோ அழைப்பிற்கு அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் வாட்ஸ்அப் அழைப்பாளரால்(Caller) மற்றொரு நபர் என்ன செய்கிறார் என்பதைக் காண முடிந்தது, இது பெறுநரின் (Recevier) தனியுரிமையை மீறுகிறது. இது தான் அவர் கண்டுபிடித்த பிழை.
Zonel Sougaijam இந்த பிழையைக் கண்டுபிடித்து, 2019 மார்ச்சில் பேஸ்புக்கின் பக் பவுண்டி புரோகிராமிற்கு (Facebook Bug Bounty Program) இந்த விஷயத்தை அறிவித்தார். இது தனியுரிமை மீறல் தொடர்பான விஷயங்களைக் கையாண்டது. பேஸ்புக் பாதுகாப்பு குழு (Facebook Security team)அவரது அறிக்கையை ஒப்புக் கொண்டது மற்றும் அதன் தொழில்நுட்ப துறை 15-20 நாட்களுக்குள் இந்த பிழையை சரிசெய்தது.
குறிப்பு
பேஸ்புக் சமூக ஊடக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பிப்ரவரி 2014 இல் 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ்அப் செய்தி சேவையை வாங்கினார்.
Answer
1. (C) மணிப்பூர்
No comments:
Post a Comment