Breaking

Saturday 10 October 2020

TNPSC UNIT 9 - e-governance in Tamil Nadu Pdf

 e-governance in Tamil Nadu


தமிழகத்தில் மின் ஆளுமை




அரசுத்‌ துறைகளின்‌ சேவைகளை பொதுமக்களுக்கு திறம் பட வழங்குவதற்கும்‌ துறைகளின்‌ செயல் திறனை முக்கிய பங்கு வகிக்கின்றது.


தற்பொழுது சுமார்‌ 75-க்கும்‌ மேற்பட்ட அரசுத்‌ துறைகளுக்கு இணையதளங்கள்‌ மற்றும்‌ மென்பொருள்‌ செயலிகள்‌ உருவாக்குதல்‌, ஆலோசனை, மென்பொருள்‌ பராமரிப்பு போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.


அரசுத்‌ துறைகள்‌, தமிழக அரசு நிறுவனங்கள்‌ தரவுத்தொகுப்புகள்‌, ஆவணங்கள்‌, சேவைகள்‌ மற்றும்‌ மென்பொருள் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடும் வகையில் தமிழக அரசின் வெளிப்படை தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


ஆதார் நிரந்தர பதிவு மையங்கள் 


இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பதிவாளராக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் பதிவு முகமையாக எல்காட் நிறுவனம் 217 நிரந்தரப் பதிவு மையங்களை ஏற்படுத்தி ஆதார் பதிவு நடவடிக்கைகளை செயல்படுத்தியது.


இந்த மையங்கள்‌ 03.10.2016 முதல்‌ தொடங்கப்பட்டு ,31.01.2020 வரை இதன்‌ வாயிலாக 50,23,586 ஆதார்‌ பரிவர்த்தனைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சமக்ரா சிக்க்ஷா - சமமான கற்றல்‌ மற்றும்‌ கற்றலுக்கான சம வாய்ப்புகளை வழங்கி பள்ளி செயல் திறனை மேம்படுத்துவதற்கான பரந்த குறிக்கோளுடன் பள்ளிக் கல்வித் துறைக்காக உருவாக்கப்பட்ட ஒரு விரிவான திட்டம்.


தற்பொழுது இந்த திட்டத்தின் கீழ் 385 கல்வி தொகுதிகளிலும் 505 ஆதார் நிரந்தர பதிவு மையங்களை நிறுவும் பணியில் எல்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


அம்மா அழைப்பு மையம் 


அம்மா அழைப்பு மையம்‌ பொது மக்களின்‌ குறைகளைத்‌ தீர்க்கும்‌ பொருட்டு 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியுடன் 19 9 2016 அன்று தொடங்கப்பட்டது.


தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தமிழக அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணினி சார்ந்த பயிற்சிகள் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது பயிற்சி அளிப்பதற்கான போதுமான பயிற்சி கூட உட்கட்டமைப்பு வசதிகள் பெருங்குடி வளாகத்திலும் மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன.


பயிற்றுவித்தல் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மின் ஆளுமை திட்டங்கள் மற்றும் மென்பொருள் செய்திகளைக் காண பயிற்சிகள் அரசு அலுவலருக்கு அழைக்கப்படுகிறது இது வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 416 நபர்கள் இந்த பயிற்சியினால் பயனடைந்துள்ளனர்.


உள்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு அமைப்பு 


அரசு துறைகள் மற்றும் முகவர்களுக்கான தேர்தலை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு புகைப்பட கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


மின்னணு அறிவிப்பு பலகை 


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வளாகங்களில் மின்னணு முறை அறிவிப்பு பலகை எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து நிறுவப்பட்டுள்ளன. 


மின்னணு கடிகாரம் 


தமிழக சட்டமன்றப் பேரவை மண்டபம் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய அறைகளுக்கு மின் அதிகாரங்களை வழங்கி அவற்றில் இணைய வசதி மூலம் ஒரே நேரம் பராமரிக்கப்படுகிறது.


தலைமை செயலகத்தின் அமைப்பு பராமரிப்பு 


தலைமைச்செயலகத்தில் வலையமைப்பு வசதி ஏற்படுத்தி முழுநேரமும் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


மின் ஆளுமை ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை 


தமிழ்நாடு மின் ஆளுமை முகமை 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசின் அனைத்து மின் ஆளுமை முயற்சிகளையும் முன்னெடுத்து திறம்பட செயல்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது. தேசிய மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு இந்த நிறுவனம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 படி தன்னாட்சி சங்கமாக பதியப்பட்டு உருவாக்கப்பட்டது.


நோக்கம் 


தொழில்நுட்பத்தில் புதுமையான நடைமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உறுதுணையாக நிறுவனமாக இருத்தல். 


அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கு தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்குதல். 


பல்வேறு முயற்சிகளை கருத்தில் கொண்டு முயற்சி செய்தல் மற்றும் இணையத்திற்கான தரவுகளை வகுத்தல். 


பல்வேறு அரசுத் துறைகளின் பொதுவான தேவைகள் தொடர்பான சேவைகளை மதிப்பீடு செய்து குறைந்த செலவில் திறமையான தீர்வை வழங்குதல். 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் பயன்பாடு அற்ற எளிமையான வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் நிறுவனங்களாக மாற்றுதல். 


ஆளுமை தொடர்பான தேவைகளுக்கு புதுமையான மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை அளித்திடும் வகையில் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடக்கநிலை நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் திறமையான தனி நபர்களை கொண்ட ஒரு ஆரோக்கியமான சூழலை செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை அளித்தல். 


மாநிலத்தில் மிகச் சிறந்த நிர்வாக அமைப்பினை உருவாக்குவதற்கு நிலவும் பொருளாதார போட்டி நிலையில் மாநிலத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கவும் உதவுதல். 


நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்தில் அனைத்து நிலைகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல். 


அரசு துறைகளுக்கு பாதுகாப்பான இணையத்தை உருவாக்குதல்.



DOWNLOAD PDF

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491