Breaking

Wednesday, 4 September 2019

New Planet




கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வானியல் வல்லுனர்கள் புதிதாக ஒரு கோளை விண்வெளியில் கண்டறிந்து அதற்கு HR 5138 b எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் புதிய கோள் மிக விசித்திரமான சுற்று வட்டப் பாதை கொண்டதாக இருப்பது அதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. 

  • விண்வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பிற கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டு நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் போது இந்தக் கோள் மட்டும் பிற கோள்களைப் பின்பற்றாமல் தனக்கென வேறொரு சுற்று வட்டப் பாதையை நிர்ணையித்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
  • மற்ற கோள்களைப் போல அல்லாமல் இந்தக் கோளின் சுற்று வட்டப்பாதையானது சூரியனை மையத்தில் கொள்ளாமல் ஒரு ஓரத்தில் கொண்டிருப்பதால் இந்தக் கோள் நீள்வட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 45 முதல் 100 வருடங்கள் ஆவதாக வானியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
  • விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது மிக விசித்திரமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இத்தனை வித்தியாசமான, நம்ப முடியாத அளவிலான சுற்றுவட்டப் பாதை கொண்ட கோளை கடந்த 20 ஆண்டுகளிலான தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு வானியல் வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது மேலும் இது போன்ற விசித்திரமான சுற்றுவட்டப் பாதைகள் கொண்ட கோள்கள் வேறு ஏதேனும் மேலும் விண்வெளியில் தென்படுகின்றனவா என்பதைக் கண்டறியும் ஆர்வத்தை வானியல் வல்லுனர்களிடையே தூண்டியுள்ளது என்பது உண்மை.
  • இந்தக் கோளானது நமது சூரியக் குடும்பத்தில் இடம்பெறுமாயின் அது கடைசிக் கோளாகக் கருதப்படும் நெப்டியூனைத் தாண்டிக் குதித்து சுமார் 3.7 மில்லியன் கிலோமீட்டர்களைக் கபளீகரம் செய்து தனக்கான சுற்றுவட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரக்கூடும் என தி அஸ்ட்ரானமிகல் ஜர்னல் எனும் விண்வெளி ஆய்வுப் பத்திரிகையின் கட்டுரையொன்றில் கூறப்பட்டிருக்கிறது.
  • இந்தப் புதிய கோளானது பெரும்பாலான நேரம் தனது நீள்வட்டப் பாதையில் சுற்றித் திரிந்து விட்டு சூரியனை நெருங்கும் போதும், இதர சூரிய குடும்பக் கோள்களின் சுற்று வட்டப்பாதையைக் கடக்கும்போதும் தாண்டிக் குதித்து மிக விரைவாக சுண்டி விடப்பட்டதைப்போல கடப்பது மிக விசித்திரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தற்போது ஜூபிடருக்கு (வியாழனுக்கு) வெகு அருகில் சுழன்று கொண்டிருக்கும் அந்தக் கோள் ஜுபிடரைக் (வியழனைக்) காட்டிலும் 3 மடங்கு பெரியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491