Breaking

Friday, 6 September 2019

India's Travel and Tourism Competitiveness Index


சர்வதேச அளவில் பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் பட்டியலில் இந்தியா 34ஆவது இடத்தை எட்டி உள்ளது.

உலக பொருளாதார மன்றம் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் பயணம் மற்றும் சுற்றுலாத்துறையின் நிலையான வளர்ச்சிக்கான காரணிகள் மற்றும் கொள்கைகளையும், அதன் மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் மேம்படுவதை அடிப்படையாக கொண்டும் 140 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் 
2013ல் 65ஆவது இடம் 
2015ல் 52ஆவது இடம் 
2017ல் 40ஆவது இடம் 
என தொடர்ந்து  முன்னேறி வரும் இந்தியா 2019ல் 6 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தை பெற்றுள்ளது. 

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதமும், வேலைவாய்ப்பில் 5.1 சதவீதமும் சுற்றுலா துறையின் மூலம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் முதல் இடத்தை ஸ்பெயின் பிடித்துள்ளது.அடுத்தடுத்து இடங்களில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 

சர்வதேச அளவில் இந்த பட்டியலில் பாகிஸ்தான் 121ஆவது இடத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறை வளர்ச்சியில் முக்கிய காரணிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 

இந்தியா பெற்றிருக்கும் தரவரிசை
  • இயற்கை வளங்களில் 14ஆவது இடம். 
  • கலாச்சார வளங்களில் 8வது இடம். 
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் 128வது இடம்.
  • ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் 105வது இடம்.
  • பாதுகாப்பில் 122வது இடம்.
  • சுற்றுலா சேவை உள்கட்டமைப்பில் 109வது இடம். 
  • தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் 105ஆவது இடத்திலும் உள்ளது.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491