அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி(Apache) ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில் இன்று சேர்க்கப்பட உள்ளன.
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக 22 அப்பாச்சி கார்டியன் AH-64E(Apache Guardian) ரக ஹெலிகாப்டர்களைத் தயாரித்து வழங்க போயிங்(Boeing) நிறுவனம் முன்வந்தது. இதற்காக அந்த நிறுவனத்துடன், இந்திய அரசு கடந்த 2015ல் ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, 4 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவிடம் வழங்கியது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், பதான் கோட்டில்(Pathankot) உள்ள விமானப் படை தளத்திற்கு எட்டு அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்துள்ளன.
இந்த ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்படுகின்றன. இந்த விழாவில், விமானப் படை தளபதி, பிரேந்தர் சிங் தனோவா (Birender Singh Dhanoa) பங்கேற்கிறார்.
குறிப்பு
உலகில் உள்ள தாக்குதல் ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி தான் முதலிடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment