தூய்மை இந்தியா திட்டத்தை(Swachh Bharat Abhiyan) நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்காவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் விருது(Bill & Melinda Gates Foundation Award) ஒன்றை வழங்குகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் விருது ஒன்றை வழங்குகிறது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போது, இந்த விருது வழங்கப்படவுள்ளது.
குறிப்பு
பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 9 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment