ஜெர்மனியில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் அதிக வேகத்தில் புகாட்டி காரை இயக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரான ஆண்டி வேலஸ்(Andy Wallace) என்பவர் இந்த புகாட்டி சிரோன் (Bugatti Chiron)காரை இயக்கினார்.
மணிக்கு 490 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளார். W16 குவாட் டர்போ என்ஜின் பொறுத்தப்பட்ட அந்தக் கார் வினாடிக்கு 136 மீட்டர் என்ற வேகத்தில் இந்தக் கார் இயக்கப்பட்டது.
கடந்த 2005 - 2007ம் ஆண்டுகளுக்கு இடையே இதுபோன்ற கார்களை புகாட்டி நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட கோனிக்செக் ஆகெரா ஆர்.எஸ்(Koenigsegg Agera RS) வகை கார் மணிக்கு 447 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. அந்தக் காரின் சாதனையை தற்போதைய புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் முறியடித்துள்ளது.
No comments:
Post a Comment