இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் (Abinandan Varthaman)க்கு வீர் சக்ரா(Vir Chakra) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் (Kulgam)தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்நாடக வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு(Prakash Jadha), கீர்த்தி சக்ரா விருது(Kirti Chakra Award) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது.
அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் F16 போர் விமானத்தை, MiG 21(Mikoyan-Gurevich) விமானத்தில் பறந்த இந்திய வீரர் அபிநந்தன் வர்தமான், R73 என்ற குறுகிய தூரம் பாயும் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தார். மிக் 21 விமானமும் தாக்கப்படவே, அதில் இருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார்.
- போர் களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் வீரத்தை கவுரவிக்கும் வகையில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
- தீவிரவாதம் உள்ளிட்ட மறைமுக சவால்களின் போது எதிரிகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, சவ்ரியா சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
No comments:
Post a Comment