இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மேலும் தலைநகர் தில்லியில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுவது வழக்கம்.
உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்தது ஆகஸ்ட் 15. இந்திய மக்களை அடிமையாக்கி அவர்களின் இரத்தம் குடித்த வெள்ளையர்களின் பிணையை உடைத்தெரிந்த மிகப் பெரிய போராட்டத்தின் வெற்றி நாளாக அமைந்தது இந்த தினம்.
இந்தியா பற்றி
1. இந்திய சுதந்திரக் கழகத்தை அமைத்தவர் யார்?
ராஷ் பிஹாரி போஸ்
2. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
3. தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரபீந்திரநாத் தாகூர்
4. இந்தியாவின் தேசியக்கொடி முதல்முறையாக எப்போது எங்கு ஏற்றப்பட்டது?
ஆகஸ்ட் 7, 1906, பார்சி பாகன் சதுக்கம், கொல்கத்தா
5. இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் யார்?
சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர்
6. ஜன கண மன என்னும் தேசியகீதப் பாடலை மக்களவையில் முதன் முதலில் எப்போது பாடப்பட்டது?
1950
7. சுதந்திர இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் யார்?
ராஜாஜி, ராதாகிருஷ்ணன் மற்றும் சி.வி. ராமன்
8. முதல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் யார்?
கேப்டன் மோகன் சிங்,
9. இந்தியாவில் கொடிகள் உற்பத்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எது?
கர்நாடக காதி கிராமோதய சம்யுக்த சங்கம்
10.மூவர்ணக்கொடியில் உள்ள அசோகர் சக்கரத்தின் பொருள் என்ன?
தர்மத்தைக் குறிக்கிறது
No comments:
Post a Comment