Breaking

Monday 8 July 2019

Tamil Nadu official Butterfly




1. தமிழகம் தனது மாநில பட்டாம்பூச்சியை அறிவிக்கும் எத்தனாவது மாநிலம்?

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

2. தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பட்டாம்பூச்சி இனம் எது?

(A) Cirrochroa thais

(B) Papilio bianor

(C) Troides minos

(D) Papilio buddha

3. தமிழகத்தின் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயோமேன் பட்டாம்பூச்சின் நிறம் ?

(A) அடர் பச்சை

(B) அடர் பழுப்பு

(C) வெளிரிய நீலம்

(D) வெளிரிய ஆரஞ்சு

4. முதன்முதலில் மாநில பட்டாம்பூச்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மாநிலம்?

(A) தமிழ்நாடு

(B) கர்நாடகா

(C) மகாராஷ்டிரா

(D) கேரளா

தமிழ் மாநிலத்தின் பட்டாம்பூச்சியாக தமிழ் இயோமேன் (Tamil Yeoman) (சிரோக்ரோவா தைஸ்(Cirrochroa thais)) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சிகள் தமிழ் மறவன் (அதாவது போர்வீரன்) என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமானவை. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் இந்த இயோமேன் பட்டாம்பூச்சி அடர் பழுப்பு வெளிப்புற வளையம் கொண்ட நிறமுடைய பட்டாம்பூச்சி உயிரினம் அடங்கும். 

தமிழகம் தனது மாநில பட்டாம்பூச்சியை அறிவிக்கும் நாட்டின் 5 ஆவது மாநிலமாக மாறியுள்ளது. 

  • முதன்முதலில் மகாராஷ்டிரா ப்ளூ மோர்மனை (Blue Mormon(Papilio Polymnestor) அதன் மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தது.
  • அதைத் தொடர்ந்து உத்தரகண்ட் Common peacockயை (Papilio polyctor),அதன் மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தது.
  • கர்நாடகா Southern Bird Wingயை (Troides minos) மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தது.
  • கேரளா Malabar banded peacockயை(Papilio buddha) மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தது.

இத்தகைய அறிவிப்புக்குப் பிறகு 


  • பட்டாம்பூச்சி அரசின் பெருமையாக மாறும்.
  • மேலும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு வழி வகுக்கிறது.
  • பட்டாம்பூச்சிகளின் முக்கியத்துவத்தையும் மக்கள் அறியமுடியும். மேலும் இது அதன் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 பட்டாம்பூச்சி இடங்கள்(Hotspots) உள்ளன. 

  • தமிழ்நாட்டின் மாநில விலங்கு (நீலகிரி தஹ்ர் (Nilgiri Tahr)).
  • தமிழ்நாட்டின் மாநில பறவை மரகத புறா(Emerald Dove).
  • தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம் (Palm Tree).
  • தமிழ்நாட்டின் மாநில மலர் குளோரியோசா (Gloriosa).
  • தமிழ்நாட்டின் மாநில பழம் பலா பழம் (Jack fruit) போன்ற பல்வேறு சின்னங்களை அரசு முன்பே அறிவித்திருந்தது.
Answer
1. (D) 5
2. (A) Cirrochroa thais
3. (B) அடர் பழுப்பு
4. (C) மகாராஷ்டிரா



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491