Breaking

Friday 21 June 2019

India's First Dinosaur Museum with Park


1. இந்தியாவின் முதல் டைனோசர்-மியூசியமும் மற்றும் புதைபடிவ பூங்கா (Dinosaur-Museum-Cum-Park) பின்வரும் மாநிலங்களில் எங்கு அமைந்துள்ளது ?

(A) ராஜஸ்தான் 

(B) குஜராத் 

(C) ஒடிசா

(D) உத்திர பிரதேசம்

இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் மற்றும் புதைபடிவ பூங்கா (Dinosaur museum and fossil park)சமீபத்தில் குஜராத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்களால் மஹிசாகர் (Mahisagar) மாவட்டத்தின் பாலசினோர் நகரத்திற்கு அருகிலுள்ள ராயோலி (Raiyoli) கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.

புதிய அருங்காட்சியகம் வரலாற்றுக்கு முந்தைய சூழலை உருவாக்கிறது. அப்போது டைனோசர்கள் ராயோலியில் சுதந்திரமாக சுற்றி வந்திருக்கலாம் என்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ராஜசரஸ் நர்மடென்சிஸின்(Rajasaurus Narmadensis) மிகப்பெரிய சிற்பம், மற்ற டைனோசர்களின் 50 சிற்பங்கள் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த அருங்காட்சியகத்தில் 3டி ப்ரொஜெக்ஷன் (3D projection), 360 degrees virtual reality, ஊடாடும் கியோஸ்க்கள்(Interactive kiosks), கேமிங் கன்சோல்கள் (Gaming consoles) மற்றும் பிற வசதிகள் உள்ளது. அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரையோலி பகுதி உலகின் மூன்றாவது பெரிய டைனோசர் புதைபடிவ தளமாகவும்(Fossil site), ஆயிரக்கணக்கான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய டைனோசர் ஹேட்சரியாகவும்(Dinosaur hatchery) அறியப்படுகிறது.


Answer
1. (B) குஜராத் 






No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491