Breaking

Friday 3 May 2019

TIME 100


மூன்று இந்தியர்கள் மேனகா குரூஸ்வாமி, அருந்ததி கட்யூ மற்றும் முகேஷ் அம்பானி (Menaka Guruswamy, Arundhati Katju and Mukesh Ambani) ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய செல்வாக்குமிக்க மக்கள் TIME 100  பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான், போப் பிரான்சிஸ், கோல்ஃப் டைகர் உட்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
மேனகா குரூஸ்வாமி
கடந்த மாதம் உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மேனகா குரூஸ்வாமி 1997 ஆம் ஆண்டு பெங்களூருவின் இந்திய சட்ட பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ரோட்ஸ் ஹவுஸில் (Rhodes House in Oxford University) இவரது உருவப் படத்தினை வெளியிட்டு இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அருந்ததி கட்யூ
அருந்ததி கட்யூ இந்திய சட்ட பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் இருந்து BA LLB (Hons.) பட்டத்தையும், கொலம்பியா சட்டப் பள்ளியின் LLM பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அருந்ததி டெல்லி ஹைகோர்ட் சட்ட சேவைகள் கமிட்டி, இந்தியாவின் சட்ட உதவித் திட்டத்துடன் பொதுமக்கள் பாதுகாவலராகவும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருந்துள்ளார்.
முகேஷ் அம்பானி 
இவர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் தலைவராகவும், மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார். இது சந்தை மதிப்பின் அடிப்படையில் மிகவும் மதிப்பு வாய்ந்த இந்திய நிறுவனமாகும்.


வினா - விடை

1) TIME 100  பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ?

(A) அருந்ததி கட்யூ

(B) மேனகா குரூஸ்வாமி

(C) முகேஷ் அம்பானி

(D) இவர்கள் அனைவரும்

2) கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி

கூற்று (A)     :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்றோர் TIME 100 பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

கூற்று (R)      : மேனகா குரூஸ்வாமி, அருந்ததி கட்யூ மற்றும் முகேஷ் அம்பானி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்றோர் TIME 100 பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

(A) (A) தவறு மற்றும் (R) சரி

(B) (A) தவறு, (R) தவறு

(C) (A) சரி,(R) சரி

(D)  (A) சரி மற்றும் (R) தவறு

3) கீழ்க்கண்டவர்களுள் TIME 100 பட்டியலில் இடம் பெறாதவர் ?

(A)  இம்ரான் கான்

(B) டொனால்ட் டிரம்ப்

(C)  நீதா அம்பானி

(D) ஜி ஜின்பிங்

ANSWERS
1) (D) இவர்கள் அனைவரும்

2) (B) (A) தவறு, (R) தவறு

3) (C)  நீதா அம்பானி





No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491