Breaking

Saturday 30 March 2019

இந்திய அரசியலமைப்பு (விக்டோரியா பேரரசியின் பிரகடனம்) | UPSC, SSC, IBPS, RRB, TNPSC And other states exams

இந்திய அரசியலமைப்பு
(Constitution of India)


விக்டோரியா பேரரசியின் பிரகடனம் (1858) 

  • இந்தியப்பெரும் புரட்சி 1857 -க்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 1858-ல் ஒழிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பேரரசியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய மக்கள் மற்றும் சுதேச மன்னர்களின் நம்பிக்கையினை பெறவும், ஆங்கிலேயர் ஆட்சியின் நிலைப்பாட்டினை தெரிவிக்கவும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். 

  • இப்பிரகடனம் 1858-ல் கானிங் பிரபுவினால் அலகபாத் தர்பாரில் பிரகடனம் வெளியிடப்பட்டது. 

  • சுதேச மன்னர்களின் தத்துக் கொடுக்கும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. 
  • இந்தியர்களுக்கு பணியிடங்கள் வழங்கவும், மதச் சுதந்திரம் வழங்கப்படுவதும் அளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்க சட்டம் (1858) 

  • இச்சட்டம்‌ கிழக்கிந்தியக்‌ கம்பெனியின்‌ ஆட்சி அதிகாரங்களைப்‌ பறித்து ஆங்கில அரசின்‌ நேரடிக்‌ கட்டுப்பாட்டில்‌ இந்தியாவைக்‌ கொண்டு வந்தது. 

  • இந்தியாவின்‌ கவர்னர்‌ ஜெனரல்‌, வைஸ்ராய்‌ ஆக அறிவிக்கப்பட்டார்‌. 

  • அப்போதிருந்த கானிங்‌ பிரபு இந்தியாவின்‌ முதல்‌ வைஸ்ராய்‌ ஆக அறிவிக்கப்பட்டார்‌. 

  • மாநிலங்களின்‌ செயலர்‌ என்ற கேபினட்‌ அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. அவர்‌ பிரிட்டிஷ்‌ பாராளுமன்றத்தில்‌ இந்தியாவை பிரதிநித்துவம்‌ செய்தார்‌. இந்தியாவின்‌ பிரிட்டிஷ்‌ பாராளுமன்ற அங்கத்தினர்‌ ஆனார்‌.

  • அவர்‌ பதினைந்து நபர்‌ கொண்ட குழுவின்‌ மூலம்‌ ஆட்சி செலுத்துவார்‌. 

  • அக்‌குழு அறிவுறுத்தும்‌ பணியை மட்டுமே செய்தது. இறுதி முடிவு பாராளுமன்றத்தாலேயே எடுக்கப்பட்டது. 
இந்திய கவுன்சில் சட்டம் (1861) 

  • இச்சட்டம்‌ இந்தியர்களை முதன்முறையாக சட்டமியற்றும்‌ அதிகாரத்தை அடைய வழி செய்தது. 

  • வைரஸ்ராய்களுக்கு இந்தியர்களை சட்டமியற்றுவதற்கு நியமிக்கும்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டது. 

  • இதனைப்‌ பின்பற்றி. 1862- ஆம்‌ ஆண்டில்‌ கானிங்‌ பிரபு வாரனாசி மற்றும்‌ பாடியாலா அரசர்களையும்‌ சர்‌ தினகர்‌ ராவ்‌ என்பவரையும்‌ நியமித்தார்‌.

  • இச்சட்டம்‌ மூலம்‌ வைஸ்ராய்க்கு விதிமுறைகளை உருவாக்கும்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டது. இன்விதிமுறைகள்‌ சட்ட அவையை நடத்த ஏதுவாக வருக்கப்பட்டன.

  • இச்சட்டம்‌ கானிங்‌ பிரபு அறிமுகம்‌ (1859) செய்த துறை சாந்த நிர்வாகத்தை அங்கீகரித்தது. 

  • இச்சட்டம்‌ வைஸ்ராய்க்கு அவசரச்‌ சட்டங்களை பிரகடனம்‌ செய்யவும்‌ அதிகாரம்‌ அளித்தது. இவ்‌அவசரநிலைப்‌, பிரகடனங்கள்‌ மாகாணங்களின்‌ ஒப்புதல்‌ இன்றியும்‌ அமையலாம்‌. இச்சட்டம்‌ 6 மாத காலம்‌ அமலில்‌ இருக்கும்‌.

இந்திய கவுன்சில் சட்டம் (1892) 

  • மத்திய மற்றும்‌ மாகாண சட்டமன்றங்களின்‌ அரசியல்‌ சார்பற்ற உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. ஆனால்‌ அரசியல்‌ சார்புள்ள உறுப்பினர்‌ எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கும்படி பார்த்துக்‌ கொள்ளப்பட்டது. 

  • சட்டமன்றங்களின்‌ பணி அதிகரித்து மேலும்‌ பட்ஜெட்‌ தொடர்பாக கேள்வி எழுப்பும்‌ உரிமை அளிக்கப்பட்டது மற்றும்‌ கேள்விகளுக்கு அமைச்சர்கள்‌ பதிலளிக்கும்‌ முறையும்‌ விரிவுபடுத்தப்பட்டது. 

  • அரசல்லாத நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ இரு வகையில்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

  • வைஸ்ராயின்‌ வழியாக மாகாண சட்ட மன்றம்‌ மற்றும்‌ வங்காள வர்த்தக அமைப்பின்‌ பரிந்துரையின்‌ படி அமையும்‌.

  • கவர்னர்‌ வழியாக மாவட்ட அமைப்பின்படி, நகரமைப்பு, பல்கலைக்‌கழகங்கள்‌, வர்த்தக கட்டமைப்பு ஜமீன்தார்கள்‌ பரிந்துரையின்‌ படியும்‌ அமையும்‌. 
இந்திய கவுன்சில்‌ சட்டம்‌ (1909) 

  • மத்திய மற்றும்‌ மாகாண சட்டமன்றத்தின்‌ உறுப்பின்‌ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
 
  • மத்திய சட்ட மன்றம்‌ 60 உறுப்பின‌ர் உடையதானது. 

  • மத்திய சட்ட மன்றத்தில்‌ அரசு உறுப்பினர்களின்‌ பெரும்பான்மை தக்க வைக்கப்பட்டது. ஆனால்‌ மாகாணத்தில்‌ அரசல்லாத உறுப்பினர்களின்‌ பெரும்பான்மை ஏற்படுத்தப்பட்டது.

  • உறுப்பினர்கள்‌ பட்ஜெட்‌ மீது துணைக்‌ கேள்விகள்‌ கேட்கவும்‌. தீர்மானம்‌ நிறைவேற்றவும்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டது.

  • சத்யேந்திர சின்ஹா, வைஸ்ராய்‌ கவுன்சிலின்‌ முதல்‌ இந்தியர் ஆனார்‌. அவர்‌ சட்ட உறுப்பினர்‌ ஆனார்‌.

  • இச்சட்டத்தின்‌ மூலம்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌, முதலில்‌ இஸ்லாமிபர்களுக்கு அளிக்கப்பட்டது.

  • மின்டோ பிரபு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ தந்‌தை என்று அழைக்கப்படுகிறார்‌.

இந்திய அரசுச்‌ சட்டம்‌ (1919) 
  • இச்சட்டம்‌ 1921-ஆம்‌ ஆண்டு அமுலுக்கு வந்தது. இது மாண்டேகு (இந்திய அரசு செயலர்) - செம்ஸ்‌ட்போர்டு (இந்திய வைசிராய்‌) சட்டம்‌ என்றழைக்கப்படுகிறது.

  • இச்சட்டம்‌ மாகாண சட்டத்துறைகளை இரண்டாக பகுத்தது.


  • 1. ஒதுக்கீட்டுப்‌ பகுதிகள்‌ - கவர்னர்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளது. 

    2. அமைச்சர்கள்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளது - மாற்றப்பட்ட பொருண்மைகள்‌ இது இரட்டை ஆட்சி முறை என்றழைக்கப்படுகிறது.

  • இச்சட்டம்‌ நேரடித்‌ தேர்தல்‌ முறையை அறிமுகம்‌ செய்தது. மேலும்‌ இரண்டு அவைகள்‌ கொண்ட மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது.

  • வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌, சீக்கியர்கள்‌, கிறித்துவர்கள்‌ மற்றும்‌ ஆங்கிலோ - இந்தியர்களுக்கும்‌ அளிக்கப்பட்டது. 

  • இச்சட்டம்‌ இந்தியாவிற்கான உயர்‌ ஆணையர்‌ என்ற புதிய அலுவலர் பதவியை லண்டனில்‌ ஏற்படுத்தியது.

  • இச்சட்டம்‌ 1926-இல்‌ தேர்வாணையத்தை என்ற புதிய அலுவலர்‌ பதவியை லண்டனில்‌ ஏற்படுத்தியது. 

  • இச்சட்டம்‌ மத்திய பட்ஜெட்டிலிருந்து மாகாண பட்ஜெட்டைப்‌ பிரித்தது.


இந்திய அரசுச் சட்டம் (1935) 
  • இச்சட்டம் அதிகாரத்தை மூன்றாகப் பிரிக்கிறது. 

1. மத்திய பட்டியல் (Central list) 

2. மாகாணப் பட்டியல் (State list) 

3. பொதுப் பட்டியல் (Concurrent list) 
  • எஞ்சிய அதிகாரங்கள்‌ வைஸ்ராயிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. 
  • இது இரட்டை ஆட்சி முறையினை முடிவுக்கு கொண்டுவந்து, மாகாணத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியது. 
  • மொத்தமுள்ள 11 மாகாணங்களில்‌. 6இல்‌ இரண்டு அவைகளை ஏற்படுத்தியது. அவை 
1. பெங்கால்‌ 
2. மும்பை‌ 
3. மெட்ராஸ்‌ 
4.பீகார்‌ 
5.அஸ்ஸாம்‌ 
6.ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகள்‌ (United Princes)

  • வகுப்புவாத பிரதிநிதித்துவம்‌ பெண்கள்‌, தாழ்த்தப்பட்டவர்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்களுக்கும்‌ அளிக்கப்பட்டது. 
  • 1858 - ஆம்‌ ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய கவுன்சிலை இச்சட்டம்‌ கலைத்தது. 
  • மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. இது நாட்டின்‌ பணப்‌ பழக்கத்தை மேற்பார்வையிட உதவியது. 
  • இச்சட்டம்‌ உச்சநீதிமன்றம்‌ அமைய வழிவகுத்தது (1937).

இந்திய சுதந்திரச் சட்டம் (1935) 
  • பிப்ரவரி 20, 1947 - இல்‌ பிரிட்டிஷ்‌ பிரதம மந்திரி கிளமண்ட்‌ அட்லி இந்தியாவில்‌ பிரிட்டிஷ்‌ ஆட்சி முடிவுக்கு வருகிறதென்றும்‌. அதன்‌ ஆட்சி அதிகாரம்‌ பொறுப்புள்வர்களிடம்‌ அளிக்கப்படும்‌ என்று அறிவித்தார்‌.

  • மவுண்ட்பேட்டன்‌ பிரபு ஜுன்‌ 3, 1947 - இல்‌ இந்திய பிரிவினைத்‌ திட்டத்தை ஏற்படுத்தினார்‌. இத்திட்டத்தை காங்கிரஸ்‌ மற்றும்‌ முஸ்லீம்‌ லீக்‌ ஆகியவை ஏற்றுக்‌ கொண்டன. 

  • இத்திட்டம்‌ இந்திய சுதந்திரச்‌ சட்டத்தை நிறைவேற்ற உதவியது. 

  • இத்திட்டம்‌ இந்தியாவை சுதந்திர நாடாக அறிவித்தது. ஆகஸ்ட்‌ 15, 1947, இந்தியா சுதந்திரம்‌ அடைந்த நாளானது. 

  • மவுண்ட்பேட்டன்‌ பிரபு சுதந்திர இந்தியாவின்‌ முதல்‌ கவர்னர்‌ ஜெனரல்‌ ஆனார்‌. அவர்‌ இந்தியாவின்‌ முதல்‌ பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பதவிப்‌ பிரமாணம்‌ செய்து வைத்தார்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491