Breaking

Friday 14 February 2020

Nobel Prize Winners 2019



இயற்பியல்

•ஜேம்ஸ் பீப்பிள்ஸ் (James Peeples) கனடா நாட்டைச் சேர்ந்தவர்.

•மைக்கேல் மேயர் (Michel Mayor) ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.

•டிடியர் குலோஸ் (Didier Queloz) ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்.


பிரபஞ்சத்தின் பரிணாமம், பிரபஞ்சத்தில் பூமியின் இடம், பிசிகல் காஸ்மாலஜி(Physical Cosmology) சித்தாந்த கண்டுபிடிப்புகள் போன்றவற்றுக்காக ஜேம்ஸ் பீப்பிள்ஸ்க்கு பரிசில் பாதி அளவு வழங்கப்பட்டது.

பிசிகல் காஸ்மாலஜி(Physical Cosmology) 

பிரபஞ்சத்தின் உற்பத்தி, பரிணாமம், அமைப்பு ஆகியவற்றுக்கான படிப்பு. 

சூரிய மண்டலத்துக்கு வெளியே முதன்முதலாக ஒரு கோளை கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், டிடியர் குலோஸ்க்கும் மீதி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றும் ஒரு எக்ஸோப்ளநெட் டை (Exoplanet) மைக்கேல் மேயர், டிடியர் குலோஸ் இருவரும் கண்டுபிடித்தனர். 

மொத்த பரிசு தொகை சுமார் 6.5 கோடி ரூபாய். 

இந்த புதிய கிரகத்தில் பெயர் “51 Pegasi b”(பெகாசி பி). இது சுமார் 50 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு உதவிய தொழில்நுட்பம் Doppler Spectroscopy. 

நவம்பர் 2019 இன் படி, 4,526 எக்ஸோப்ளநெட் டை (Exoplanet) குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை 1,067 குரூப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவற்றில் 671 குரூப்புகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ளன.

வேதியியல் 

•எம் ஸ்டான்லி விட்டிங்காம்(M. Stanley Whittingham) அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 

•ஜான் பி குடினஃப்(John B. Goodenough) அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 

•அகீரா யோஷினோ(Akira Yoshino) ஜப்பான் நாட்டை சேர்ந்தவர். 
 

லித்தியம் அயோன் பேட்டரி கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது.


மருத்துவம் 

•சர் பீட்டர் ஜே ராட்கிளிஃப்(Sir Peter J. Ratcliffe) இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். 

•கிரேட் என் ஸொமென்ஸா(Gregg L. Semenza) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 

•வில்லியம் ஜி கிலீன் ஜூனியர் (William G. Kaelin Jr,)அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 


உடலில் ஆக்ஸிஜனின் அளவு வேறுபடும் போது செல்கள் அதை உணர்வதை குறித்தும் அதனோடு எதிர்வினை புரிவது பற்றிய ரகசியங்களை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


இலக்கியம்
•பீட்டர் ஹன்ட்கே(Peter Handke) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். 


மொழியியல் புத்தி கூர்மை மூலம் சுற்றளவு மற்றும் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு செல்வாக்குமிக்க படைப்பினை படைத்ததற்காக. 

Offending the audience(நாடகம்) 
A Sorrow Beyond Dreams(சுயசரிதை) 
The Goalic’s Anxiety at the Penalty Kick(குறுநாவல்)

சமாதானம் 

•ஆபி அகமது அலி (Abiy Ahmed Ali) எத்தியோப்பியா பிரதமர். 

எத்தியோப்பியா - எரித்திரியா எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து அந்தப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


100வது சமாதான நோபல் பரிசு பெற்றவர் என்னும் சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

பொருளாதாரம் 

•அபிஜித் பானர்ஜி(Abhijit Banerjee) இந்தியா - அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 

•எஸ்தர் டஃப்லோ (Esther Duflo) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். 

•மைக்கேல் கிரமர் (Michael Kremer) அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். 


உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான முன்னோடி திட்டங்களை தீட்டி அதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491