குரூப் 4, குரூப் 2ஏ பதவிகளுக்கு
இனி 2 தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் வரும் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கு இனி இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மூலமாக இனி இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கடந்த வாரத்தில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இன்று சில முக்கிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மாற்றங்கள்
- குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்து வந்தது. ஆனால் இனி, இந்த தேர்வுகள் இரண்டு நிலைகளாக நடத்தப்பட உள்ளன.
- முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகளாக நடத்தப்பட இருக்கின்றன.2 தேர்வுகளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும்.
- அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயாமாகும். ஏதேனும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்கவில்லையென்றால் விடைத்தாள் செல்லாது என்று அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment