தேசிய தகவல் மையத்தில் (NIC) காலியாக உள்ள சுமார் 500 ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ. பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தகவல் மையத்தில் (NIC)
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிட விவரம்:
தேசிய தகவல் மையத்தில் தற்போது ஆராய்ச்சியாளர் பணிக்கு 288 காலிப் பணியிடங்களும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 207 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிகள் சைன்டிஸ் "பி" பிரிவிற்கு உட்பட்டதாகும். பி.இ, அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.இ, எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எம்எஸ்சி, எம்.எஸ்., எம்சிஏ, பி.இ, பி.டெக் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
26.3.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 33 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://www.nielit.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 26 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26 மார்ச் 2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தேசிய தகவல் மையத்தின் recruitment.nic.in என்னும் வேலைவாய்ப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.
No comments:
Post a Comment