Breaking

Thursday, 12 September 2019

India to Nepal



இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், செலவைக் குறைத்து, பாதுகாப்பான முறையில் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்வதற்காக, இந்தியா-நேபாளம் இடையே எல்லைப் பகுதியில் 69 கிலோமீட்டர் நீளத்திற்கு, 325 கோடி ரூபாய் செலவில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

  • 1996ஆம் ஆண்டில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டாலும், 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி காத்மாண்டு சென்றபோதே, திட்டம் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

  • பீகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள மோத்திஹரியில் இருந்து, பீகார் எல்லை அருகே அமைந்துள்ள, நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள அம்லேக்-கஞ்ச் வரை பெட்ரோலியக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இது, குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான, தெற்காசியாவின் முதல் திட்டமாகும்.

  • எரிசக்தித் துறை ஒத்துழைப்பிற்கான இந்த திட்டம், இந்தியா-நேபாளம் இடையேயான நெருக்கமான பிணைப்பிற்கு எடுத்துக்காட்டு.

குறிப்பு
த்திட்டம் தெற்காசியாவின் முதல் திட்டமாகும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491