Breaking

Saturday, 7 September 2019

Beti Bachao, Beti Padhao Award



தேசிய அளவில் பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம்(Beti Bachao, Beti Padhao program) எனும் மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திதற்காக தமிழகத்தின் நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.


  • இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேசிய அளவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், டில்லி ஆகிய ஐந்து மாநிலங்களும்.
  • தமிழகத்தின் திருவள்ளூர், நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டன.
  • மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாட்டில் திருவள்ளூர் சிறந்த மாவட்டமாக தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 916 பெண் குழந்தைகள் என இருந்தது. கடந்த ஆண்டு 923 ஆக இருந்தது. தற்போது 963 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பு
பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015, ஜனவரியில் தொடங்கி வைத்தார். 

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491