டைம்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் 2019 ஆம் ஆண்டில் உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தங்குவதற்கு இடங்கள், சாப்பிட வேண்டிய இடங்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஒற்றுமை சிலை பட்டியலில் இடம் பிடித்தது.
குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை அல்லது ஒற்றுமை சிலை(Statue of Unity). சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்தார். இவரது சிலை 182 மீட்டர் உயரத்தில் நிற்கும் உலகின் மிக உயரமான சிலை ஆகும்.
இந்த சிலை சர்தார் சரோவர் அணையை எதிர்கொள்ளும் நர்மதா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
குறிப்பு
இந்த சிற்பத்தை படேல் 143 வது பிறந்தநாளில் அக்டோபர் 31, 2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment