உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டி பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த 26ந் தேதி தொடங்கியது. வருகிற 3ந் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளவேனில், மற்ற வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி 251.7 புள்ளிகளைக் குவித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பிரிட்டன் வீராங்கனை மெக்கின்டோஷ் சியனாய்டு வெள்ளிப் பதக்கத்தையும், தைபேயைச் சேர்ந்த லின் யிங்ஷின் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
No comments:
Post a Comment