Breaking

Friday 5 July 2019

Union Budget 2019



1. 2014 ஆம் ஆண்டு 1.5 Trillion Doller க இருந்த இந்திய பொருளாதாரம் ஐந்தாண்டுகளில் -----------உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்

(A) 2.2 Trillion

(B) 2.5 Trillion

(C) 2.7 Trillion

(D) 2.9 Trillion

இந்தியாவில் உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு  பாஜக ஆட்சி அமைக்கும் போது 1.55 ட்ரில்லியன்(Trillion) அமெரிக்க டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் ஐந்தாண்டுகளில்  2.7 ட்ரில்லியன்(Trillionஅமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்களாக அதிகரிக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் தமது பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்புகள்

1. மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

2. ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

3. 2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித் தரப்படும்.

4. அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ புதிய சாலைகள் அமைக்க இலக்கு. கிராமப் புறங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் எரிவாயு இணைப்பு உறுதி செய்யப்படும்.

5. ரயில்வேதுறையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்.

6. பாரத்மாலா(Bharatmala), சாகர்மாலா(Sagar mala) திட்டங்கள் மூலம் போக்குவரத்துதுறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

7. ’உதான்’ (Ude Desh ka Aam Naagrik(UDAN)) திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த செலவில் விமான சேவை தொடங்கப்படும்.

8. ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்.

9. வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்.

10. வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்காக சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.

11. ஊடகம், விமானம், காப்பீட்டு துறைகளில் 100% அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்.

12. மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம் ஒரே மின்தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

13. கிராமப் புறங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் எரிவாயு இணைப்பு உறுதி செய்யப்படும்.

14. வெளிநாட்டுமாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில ‘Study in India’ திட்டம். உயர்கல்வியை மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

15. ஆராய்ச்சித் துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்.

16. 9.5கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டிக்கொடுக்கப்படும். மேலும் 75,000 பேருக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும்.

17. 2024ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் ஹர் கர் ஜல் திட்டம் (Har ghar jal project)மூலம் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

18. இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு New Space India Ltd புதிய அமைப்பு தொடங்கப்படும்.

19. கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.

20. காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க ‘காந்திபீடியா’ (Gandhipedia)உருவாக்கப்படும்.

21. நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

22. புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட புதிய டிவி சேனல் தொடங்கப்படும்“விளையாடு இந்தியா”(Khelo India (கேலோ இந்தியா)) திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

23. ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா(MUDRA) திட்டத்தின்  கீழ் ரூ.1 லட்சம் நிதி உதவி.

24. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.

25. தொழில்முனைவோர் (Start-Up)துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில்(DD) சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

26. பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ.70,000 கோடி மூதலீட்டு மூலதனம் வழங்கப்படும்.

27. உலக சந்தையில் இந்திய கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளை விற்க நடவடிக்கை

28. உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரூ.400 கோடி.

29. நாட்டில் உள்ள 17 சுற்றுலாத் தலங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

30. பார்வையற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில் 1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.

Union budget income tax announcement: வருமான வரித்துறை அறிவிப்புகள்

1. ‘PAN Card’ இல்லையென்றாலும், ஆதார் அட்டையை பயன்படுத்தி வருமானவரி தாக்கல் செய்யலாம்.

2.மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு.

3.ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி தள்ளுபடி அறிவிப்பு தொடரும்.

4. ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வரவு, செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி.

5. வங்கிக்கணக்கிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து பணபரிவர்த்தனை செய்தால் 2% வரி விதிக்கப்படும்.

6. 50 கோடி ரூபாய் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்துகொண்டால் வரி ஏதும் இல்லை.

7. பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு.

8. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான செஸ்வரி 1% உயர்வு.

9. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி

10. புத்தகங்களுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும்.

குறிப்பு
இந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.

Answer
1. (C) 2.7 Trillion


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491