Breaking

Thursday 4 July 2019

Tamil Glossary Plan



1. சொற்குவைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

(A) 50 லட்சம்

(B) 1 கோடி

(C) 2 கோடி

(D) 75 லட்சம் 

2. தமிழில் எத்தனை சொற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது?

(A) 2 லட்சத்து 1,902

(B) 3 லட்சத்து 1,600

(C) 4 லட்சத்து 1,931

(D) 4 லட்சத்து 1,950


சொற்குவைத் திட்டத்தின் (Glossary Plan) கீழ் உருவாக்கப்பட்ட சொற்கள், சில நாள்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 

தமிழில் புதிய சொற்களை உருவாக்க சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தமிழில் 4 லட்சத்து ஆயிரத்து 931 சொற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 471 சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தைவிட தமிழில் இருமடங்குக்கு மேலாக தனித்துவம் பெற்ற சொற்கள் உள்ளன. பிரிட்டானியா தேசிய தரவகத்தின் வடிவத்தைப் போன்றே சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அகராதி, வேதியியல்‌ அகராதி போன்றவற்றை இதற்கு முன் வெளியிட்டுள்ளனர். இந்த அகராதிகள்‌ உள்பட மொத்தமாக உருவாக்கப்பட்ட சொற்களின்‌ எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 875 ஆகும்‌. இன்னும்‌ 6 லட்சம்‌ சொற்கள்‌ தமிழில்‌ இருக்கும்‌ எனக்‌ கூறியுள்ளனர். இப்போது இருக்கும் நூற்றுக்கும்‌ மேற்பட்ட அகராதிகளை ஒருங்கிணைத்து செய்யக்‌ கூடிய அம்சம்தான்‌ சொற்குவை திட்டம்‌.

Answer
1. (B) 1 கோடி
2. (C) 4 லட்சத்து 1,931





No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491