1. Henley Passport Index 2019ன் (ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு) இந்திய பாஸ்போர்ட்டின் தரம் என்ன?
(A) 66
(B) 76
(C) 86
(D) 96
2. Henley Passport Index 2019ன் (ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு) முதலிடம் பிடித்த நாடு ?
(A) ஜப்பான்
(B) சிங்கப்பூர்
(C) (A) & (B)
(D) பின்லாந்து
சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2019 (Henley Passport Index) இல் இந்திய பாஸ்போர்ட் 58 மதிப்பெண் பெற்று தரத்தில் 86 ஆவது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் முன் விசா இல்லாமல் உலகெங்கிலும் 58 நாடுகளை அணுக முடியும். இந்த குறியீட்டில் 199 பாஸ்போர்ட் மற்றும் 227 பயண இடங்கள் உள்ளன - மைக்ரோ மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்(Micro-States and Territories) உட்பட. இந்தியா 86 ஆவது இடத்தை மொரிஷியானா (Mauritiana) மற்றும் சாவோ டோம் & பிரின்சிபியுடன் (Sao Tome & Principe) பகிர்ந்து கொள்கிறது.
- இந்த பட்டியலில் ஜப்பான் & சிங்கப்பூர் (Japan & Singapore) 189 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளன.
- தென் கொரியா (South Korea), பின்லாந்து(Finland) மற்றும் ஜெர்மனி (Germany)187 மதிப்பெண் பெற்று 2 ஆவது இடத்தையும்.
- டென்மார்க்(Denmark), இத்தாலி(Italy) மற்றும் லக்சம்பர்க்(Luxembourg)186 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தரவரிசை சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் (International Air Transport Association (IATA)) தரவை அடிப்படையாகக் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகத் துல்லியமான பயணத் தரவுத்தளத்தைப் பராமரிக்கிறது.
Answer
1. (C) 86
2. (C) (A) & (B)
No comments:
Post a Comment