Breaking

Wednesday 24 April 2019

திருக்குறள் | இலக்கியம்

இலக்கியம்

திருக்குறள்


ஆசிரியர் குறிப்பு

பெயர் 
திருவள்ளுவர்

காலம் 
கி.மு 31ல் பிறந்தவர் என உறுதி செய்து திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

வேறு பெயர்கள் 
பொய்யாமொழிப்புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், தேவர், நாயனார்.

சிறப்பு 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் கூறியுள்ளார்.


வள்ளுவனைப் பெற்றதால் அதே புகழ் வையகம் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். 


நூல் குறிப்பு 
குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள். இது திரு என்னும் அடைமொழியை பெற்று திருக்குறளில் என வழங்கப்படுகிறது. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. 

அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், 4 இயல்களையும் கொண்டுள்ளது. .அவை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

பொருட்பால்  70 அதிகாரங்களையும், 3 இயல்களையும் கொண்டுள்ளது. அவை அரசியல், அங்கவியல், ஒழிபியல்.

இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும், 2 இயல்களையும் கொண்டுள்ளது. அவை 
களவியல், கற்பியல்.

இதில் 133 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. 

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும். 

திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துகளை கொண்டுள்ளதால் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது. இது தமிழ் மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது.

திருக்குறள் ஏறக்குறைய 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அம்மொழிகளில் சில

அரபு, வங்காளம், சீனம், செக், டச்சு, ஆங்கிலம், பிஜி, ஃபின்னிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, இந்தி, ஜப்பானிய மொழி, கன்னடம், கொங்கனி, கொரியன், லத்தீன், மலாய், மலையாளம், மணிப்புரியம், ஒடியா மொழி, போலிஷ்,பஞ்சாபி, ராஜஸ்தானி, ரஷ்ய மொழி,சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, சிங்களம், ஸ்வீடிஷ், தெலுங்கு, உருது.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491