Breaking

Monday 22 April 2019

எவ்வகை வாக்கியம் | இலக்கணம்


இலக்கணம்

எவ்வகை வாக்கியம்

இலக்கணத்தில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி இதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

தமிழ்மொழி வாக்கியங்களை 15 வகையாகப் பிரிக்கலாம்.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இவை மூன்றும் இருந்தால்தான் அது வாக்கியம் ஆகும்.

தமிழ்மொழி வாக்கியங்களின் வகைகள்

1. தனி வாக்கியம்
2. தொடர் வாக்கியம்
3. கலவை வாக்கியம்
4. செய்தி வாக்கியம்
5. வினா வாக்கியம்
6. விழைவு வாக்கியம்
7. உணர்ச்சி வாக்கியம்
8. தன்வினை வாக்கியம்
9. பிறவினை வாக்கியம்
10. செய்வினை வாக்கியம்
11. செயப்பாட்டு வினை வாக்கியம்
12. உடன்பாட்டு வாக்கியம்
13. எதிர்மறை வாக்கியம்
14. நேர்கூற்று வாக்கியம்
15. அயற்கூற்று வாக்கியம்.

1. தனி வாக்கியம்
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் செயப்படு பொருளை பெற்றோ பெறாமலோ ஒரே பயனிலையைக் கொண்டு முடியும் வாக்கியம் தனி வாக்கியம்.

எடுத்துக்காட்டு
கனிமொழி படம் வரைந்தாள்

இவற்றில்
கனிமொழி என்பது எழுவாய்
படம் என்பது செயப்படுபொருள்
வரைந்தாள் என்பது பயனிலை

2. தொடர் வாக்கியம்
ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும் வாக்கியம் தொடர் வாக்கியம்.

எடுத்துக்காட்டு
சோழர்கள் அரசாண்டார்கள்; நல்லாட்சி தந்தார்கள்;
இவற்றில்
சோழர்கள் என்பது எழுவாய்
ஆண்டார்கள்; நல்லாட்சி தந்தார் என்பது பயனிலை.

3. கலவை வாக்கியம்

முதன்மை வாக்கியத்துடன் ஒரு சார்பு வாக்கியமோ அல்லது பல சார்பு வாக்கியமோ இருந்தால் அது கலவை வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
அரசியல் தலைவர் பேசிக்கொண்டு இருந்தபோதே கூட்டம் கலைந்து சென்றது.
இவற்றில் கூட்டம் கலைந்து சென்றது என்பது முதன்மை வாக்கியம்.
அரசியல் தலைவர் பேசிக்கொண்டு இருந்தபோதே என்பது முற்றுப்பெறாத ஒரு சார்பு வாக்கியம்.

4. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியை தெளிவாக தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
சேக்கிழார் பெரிய புராணம் எழுதினார்.

இவற்றில் கூற வந்த செய்தியை முற்றிலும் தெரிவித்துவிட்டு இருப்பதால் இது செய்தி வாக்கியம் ஆகும்.

5. வினா வாக்கியம்

வினாவில் முடிந்து வினாப் பொருள் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.

எடுத்துக்காட்டு

உன் நண்பன் எங்கே?

இவற்றில் வினாவில் முடிந்துள்ளதால் இது வினா வாக்கியம் ஆகும்.

6. விழைவு வாக்கியம்
கட்டளை, வாழ்த்து, வேண்டுகோள், திட்டுதல் இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிவித்தால் அது விழைவு வாக்கியம்.

எடுத்துக்காட்டு

நீ அங்கு போகாதே என்பது கட்டளை.
இறைவா நீ வாழ்க என்பது வாழ்த்து.
தயவு செய்து நான் சொல்வதை கேள் என்பது வேண்டுகோள்.
நீ திருந்த மாட்டாய் என்பது திட்டுதல்.

7. உணர்ச்சி வாக்கியம்

அச்சம், வியப்பு, நகைச்சுவை, அழுகை, பெருமிதம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை விளக்குவது உணர்ச்சி வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
ஐயோ! பூகம்பம் வெடித்ததே என்பது அச்சம்
ஆ! என்ன தாஜ்மஹாலின் அழகு என்பது வியப்பு

8. தன்வினை வாக்கியம்
ஒருவர் தான் செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியம்.

எடுத்துக்காட்டு
கவிஞர் கவிதை எழுதினார்.
இவற்றில் கவிஞர் தாம் செய்யும் செயலாகிய கவிதையை எழுதினார் எனவே இது தன்வினை வாக்கியம் ஆகும்.

9. பிறவினை வாக்கியம்
ஒருவர் பிறரைக் கொண்டு தொழில் செய்வது பிறவினை வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
ஆசிரியர் பாடம் கற்பித்தார்
இதில் கற்பித்தார் என்பது பிறவினை வாக்கியம். கற்றல் என்பது தன்வினை ஆகும்.

10. செய்வினை வாக்கியம்

எழுவாய் செயலை செய்வதாக கூறுவது செய்வினை வாக்கியம்.ஒரு செயலை செய்பவரை வாக்கியத்தின் முதலில் கூறுவது செய்வினை வாக்கியம்.


எடுத்துக்காட்டு
கண்ணன் பாட்டு பாடினான்
இதில் பாட்டு பாடினான் என்னும் செயலை செய்யும் எழுவாய் கண்ணன் முதலில் வந்து பின்னர் வாக்கியம் தொடங்குகிறது எனவே இது செய்வினை வாக்கியம்.

11. செயப்பாட்டு வினை வாக்கியம்

எதனை செய்தாரோ அதனை எழுவாயாகவும், முதனிலையாகவும், மூன்றாம் வேற்றுமை உருவாகி ஆல் என்ற சொல்லையும் பயனிலையாக படு என்ற சொல்லையும் பெற்று வரும் வாக்கியம் செயப்பாட்டு வினை வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
பாடம் மாணவரால் கற்பிக்கப்பட்டது
இவற்றில் செயப்படு பொருளாக பாடம் முதலில் வருகிறது மேலும் மாணவரால் என்பதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு இணைந்து உள்ளது. கற்பிக்கப்பட்டது என்பதில் படு எனும் சொல் வருகிறது எனவே இது செயப்பாட்டு வினை ஆகும்.

12. உடன்பாட்டு வாக்கியம்
ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடைபெறுவதை உறுவது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
பூனைகள் தாவிக் குதித்தன
இதில் குதித்தன என்பது உடன்பாட்டை குறிக்கிறது.

13. எதிர்மறை வாக்கியம்
ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி நடைபெறாத தன்மையை கூறுவது எதிர்மறை வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
மான்கள் துணி ஓடாது
இதில் நிகழாத தன்மையை உணர்த்துவதால் இதில் எதிர்மறை வாக்கியம் ஆகும்.

14. நேர்கூற்று வாக்கியம்

ஒருவர் கூறியதை அவர் கூறிய வாரே கூறுவது நேர்கூற்று வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
தந்தை மகனைப் பார்த்து உடனே வீட்டிற்குச் செல் என கூறினார்.
இதில் நடந்ததை அப்படியே சொற்களால் கூறுகிறோம் எனவே இது நேர்கூற்று வாக்கியம் ஆகும்.

15. அயற்கூற்று வாக்கியம்
ஒருவர் கூறிய செய்தியை அப்படியே பிறர் கூறுவது போல மாற்றிச் சொல்வது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.

எடுத்துக்காட்டு
மாணவர்கள் ஏமாற்றம் அடைந்ததாக ஆசிரியர் கூறினார்.
இதில் பிறர் கூறுவது போல செய்து அமைக்கப்பட்டுள்ளது எனவே இது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491