Breaking

Saturday, 27 April 2019

2019 Asian Athletics Championships


2019 Asian Athletics Championships

23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 கத்தார் தலைநகர் தோகாவில்  உள்ள கலீஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 21ல் தொடங்கி ஏப்ரல் 24 வரை நடைப்பெற்றது. இதில் மொத்தம் 43 போட்டிகளில் 43 நாடுகள் பங்கெடுத்தன.

11 தங்கம் மற்றும் மொத்தம் 22 பதக்கங்களுடன் பஹ்ரைன் முதலிடத்தை பிடித்தது. 
சீனா மொத்தம் 29 பதக்கங்கள் (9 தங்கம்), ஜப்பான் மொத்தம் 18 பதக்கங்கள் (5 தங்கம்) கொண்டது. 
3 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கம்  மற்றும் 7 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றது.


ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 17 பதக்கம் வென்று தரவரிசை அட்டவணையில் 4 ஆவது இடத்தைப் பிடித்தது. 

1. 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் (1500 metres) - அஜய் குமார் சரோஜ்(Ajay Kumar Saroj) - வெள்ளி.

2. 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் (10,000 metres) - கவிய்ட் முரளி குமார் (Gavit Murli Kumar) - வெண்கலம்.

3. 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்(400 metres hurdles) - ஜபீர் மடரி பல்லியிலால் (Jabir Madari Palliyalil) - வெண்கலம்.

4. 3000 மீட்டர் தடைகளோடு கூடிய  பந்தயம் (3000 metres steeplechase) - அவானஷ் ஸேபிள்(Avinash Sable) - வெள்ளி.

5. குண்டு எறிதல் (Shot put) - தேஜிந்தர் பால் சிங் டோர் (Tejinder Pal Singh Toor) - தங்கம்.

6. ஈட்டி எறிதல் (Javelin throw) -  ஷிப்பால் சிங் (Shivpal Singh) - வெள்ளி.

7. 200 மீட்டர் (200 metres) - டூட்டி சந்த் (Dutee Chand) - வெண்கலம்.

8. 400 மீட்டர் (400 metres) - எம். ஆர். பூவம்மா (M. R. Poovamma) - வெண்கலம்.

9. 800 மீட்டர் (800 metres) - கோமதி மாரிமுத்து (Gomathi Marimuthu) - தங்கம்.


10. 1500 மீட்டர் (1500 metres) - பி.யு. சித்ரா(P. U. Chitra) - தங்கம்.

11. 5000 மீட்டர் (5000 metres) - பரூல் சௌத்ரி (Parul Chaudhary) - வெண்கலம்

12. 10,000 மீட்டர் (10,000 metres) - சஞ்சீவி ஜாதவ் (Sanjivani Jadhav) - வெண்கலம்.

13. 400 மீட்டர் தடை (400 metres hurdles) - சரைதா கயாகுவாட் (Sarita Gayakwad) - வெண்கலம்.

14. 4 × 400 மீட்டர் ரிலே (4×400 metres relay) - ப்ரச்சி, எம். ஆர். பூவம்மா, சரைதா கயாகுவாட், வி. கே. விஸ்மயா (Prachi, M. R. Poovamma, Sarita Gayakwad, V. K. Vismaya) - வெள்ளி.

15. ஈட்டி எறிதல் (Javelin throw) -  அனூ ராணி (Annu Rani) - வெள்ளி.

16.ஹெப்டதலான் (Heptathlon) - ஸ்வாப்னா பர்மன் (Swapna Barman) - வெள்ளி.

17. 4×400 metres relay - முகம்மது அனாஸ், எம். ஆர். பூவம்மா, விஸ்மாஸ் வெலுவா கோரொத், அரோக்கிய ராஜீவ் (Mohammad Anas, M. R. Poovamma, Vismaya Velluvakoroth, Arokia Rajiv) - வெள்ளி.



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491