வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்
Main Concepts of life science
வாழ்க்கை அறிவியல் என்பது அறிவியலின் கிளைகள், அவை உயிர் மற்றும் உயிரினங்களின் அறிவியல் ஆய்வுகளான - நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றவை ஆகும்.
சில
வாழ்க்கை
அறிவியல்
குறிப்பிட்ட வகை
உயிரினத்தில் கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, விலங்கியல் என்பது விலங்குகள்
பற்றிய ஆய்வு ஆகும்,
அதுபோல் தாவரவியல் தாவரங்களின்
ஆய்வு ஆகும். மற்ற வாழ்க்கை அறிவியல் அனைத்தும் உடற்கூறியல், மரபியல் மற்றும் பல வாழ்க்கை வடிவங்களுக்கும் பொதுவான அம்சங்களிலும் கவனம் செலுத்துகின்றன.
உயிரினங்களைப் பற்றிய அறிவியல்
பிரிவு உயிரியல் எனப்படும். உயிரியலில் தாவரங்களும், விலங்குகளும் அடங்கி உள்ளன.
உயிருள்ள பொருளையும், உயிரற்ற
பொருளையும் எளிதாக
வேறுபடுத்திக்
காட்டவிடலாம்.
எடுத்துக்காட்டாக நமக்கும் பொம்மைக்கும் என்ன வேறுபாடு ?
. நம்மால் நடக்க, உண்ண, பார்க்க மற்றும் பல
வேலைகளைச் செய்ய இயலும். ஆனால் இத்தகைய செயல்களை ஒரு பொம்மையால் செய்ய முடியாது இருப்பினும் மேலே குறிப்பிட்ட பண்புகள்
எல்லா உயிரினங்களிலும் காண இயலாது.
. ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் இடம் விட்டு
இடம்பெயரவோ, நாம் உண்பது போல உண்ணவோ முடிவதில்லை. ஆனால் அவற்றிற்கு உயிரில்லை என்று கூறிவிட முடியாது.
. மனிதன் தன்னைச் சூழ்ந்து வாழும் பல உயிரினங்களைச்
சார்ந்து தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.
. மனிதன் உட்பட எல்லா விலங்கினங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
தத்தம் உணவுத் தேவைக்காக தாவரத்தையே சார்ந்துள்ளன.
. தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை மூலமாகத் தயாரித்துக் கொள்கின்றன. இத்தகைய முக்கியமான செயலினை விலங்குகளாலும், மனிதர்களாலும் செய்ய முடியாத ஒரு
மாபெரும் செயலாகும்.
. பிற உயிரினங்கள் வாழ உணவு தந்து
உதவும் தனி உலகம் தாவர உலகம்.
உணவு
மட்டுமின்றி, உடைக்கான
பொருள்,
உறைவிடப் பொருட்கள், ஆக்ஸிஜன், நோய் தீர்க்கும் மருந்துகள் போன்றவை தாவரங்கள்
நமக்கு அளிக்கும் வளங்கள் ஆகும். மழை வளத்திற்குத் தாவரங்கள், குறிப்பாகக் காடுகள்
இன்றியமையாதவையாகும்.
உயிரிகளின் பண்புகள் :
உயிரணுக்களால் உருவாக்கப்படும் உயிரிகள் உயிருள்ளவை எனப்படும்.
எ.கா. தாவரங்கள், விலங்குகள்
உயிரணுக்கள் அற்ற திடப்பொருள்களால் ஆனவை உயிரற்றவை எனப்படும்
எ.கா. கற்பாறை, புத்தகம்.
உயிருள்ளவற்றில் தாவரங்கள், விலங்குகள் அடங்கும்.
உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவற்றை எவ்வாறு வேறுபடுத்தலாம்?
உயிருள்ளவை
பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது. அனைத்து உயிருள்ளவற்றிற்கும்
•வாழ உணவு தேவை.
•செல்களால் ஆனவை.
•சுவாசம் மூலம் உணவை ஆற்றலாக
மாற்றுகின்றன.
•தன் வாழ்க்கையின் சில பருவம் வரை
வளர்ச்சி அடைகின்றன.
•புறத்தூண்டலுக்கு ஏற்பத் துலங்கல்களை
ஏற்படுத்துகின்றன.
•குறிப்பிட்ட காலம் வரை உயிர் வாழ்கின்றன.
•இனப்பெருக்கம் செய்கின்றன.
ஆனால், உயிரற்றவற்றிற்கு இப்பண்புகள்
கிடையாது.
தாவரங்களின் பல்வேறு வாழிடங்கள் :
நாம் வாழும் வாழ்வியல் சூழலில் பல்வேறு வகையான தாவரங்கள் உள்ளன. அனைத்துத் தாவரங்களும்
தன் வாழிடத்திற்கு ஏற்ப தன்னைத்
தகவமைப்புச்
செய்து கொள்கின்றன.
உயிர்வாழும் இடம் தாவரத்திற்கு
உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் தேவையான உணவு, உறைவிடம், தட்பவெப்பநிலையை அளிக்கின்றன. இவ்வகை
இடத்தை வாழிடம் என்கின்றோம்.
இயற்கையில் தாவரங்கள்
நீர், நிலம், பாலைவனம், மலைப்பிரதேசம் போன்ற
பல்வேறு வாழிடங்களில் வாழ்கின்றன.
வார்மிங்
என்ற தாவரவியல்
அறிஞர் தாவரங்களை நீர்த்தேவையின் அடிப்படையில் மூன்று
வகைகளாகப்
பிரித்தார். அவையாவன.
1. நீர்வாழ்த் தாவரங்கள்
2. இடைநிலத் தாவரங்கள்
3. வறண்டநிலத் தாவரங்கள்
Download PDF for full content
முழுமையான PDFஐ பெற
No comments:
Post a Comment