Breaking

Thursday, 7 February 2019

இந்திய LPG நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் பயன்பாடு

இந்திய LPG நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் பயன்பாடு

   உலகிலேயே LPG இன் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளராக உருவெடுத்துள்ளது. இது பாரம்பரிய சமையல் எரிபொருள்கள், விறகு மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றிற்க்கு மாற்றாக அமைந்துள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் 12.5 சதவிகிதம் LPG இறக்குமதி 12 மில்லியன் மெட்ரிக் டன் ஆக 2018-19 ஆம் ஆண்டில் வளர்ந்ததுள்ளது. சீனாவுக்கு அடுத்ததாகவும், ஜப்பானை விட LPG அதிகமாக இறக்குமதி செய்வதிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈரானிலிருந்து LPG இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்தியாவில் நடப்பு ஆண்டின் LPG நுகர்வோர் எண்ணிக்கை 15 சதவீதமாக உயர்ந்து வருவகிறது. 2014-15 ஆம் ஆண்டில் 14.8 கோடியிலிருந்து 2017-18ல் 22.4 கோடியாக உயர்ந்துள்ளது.


கிராமப்புற பகுதிகளில் LPG பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் LPG நுகர்வுகளில் 8.4 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே LPG பயன்பாட்டில் 22.5 மில்லியன் டன் இந்தியா பயன்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டளவில் 30.3 மில்லியன் டன்களாகவும், 2040 ஆம் ஆண்டிற்குள் 40.6 மில்லியன் டன்களாகவும் இருக்கும் என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகம் மதிப்பிடுகிறது.


குறிப்பு 

பிரதான மந்திரி உஜ்ஜ்வல யோஜனா (PMUY) யின் பிரதான திட்டமானது, LPG பயன்பாட்டினை குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. பிரதான் மந்திரிய உஜ்ஜுவலா யோஜனா (PMUY) கீழ் புதுப்பிக்கப்பட்ட எண்ணிக்கை மார்ச் 20, 2020 க்கு முன்னர் 8 கோடி குடும்பங்களுக்கு LPG இணைப்புகளை வழங்குவது ஆகும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491