தமிழ்நாடு அரசுப்பணியாளர் கேர்வாணையம்
செய்தி வெளியீடு
நாள்: 11.03.2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (நோமுகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி II மற்றும் தொகுதி IIA)-க்கான அறிவிக்கையை 23.02.2022 அன்று வெளியிட்டது. அத்தேோர்விற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.03.2022 ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில், பலர் விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பித்தப் பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அனுமதிக்கக்கோரியும் தேர்வாணையத்தை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொண்டு வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக, விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும் வகையில் 14.03.2022 (முதல் மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 23.03.2022 வரை விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம் மேற்கொள்ள தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.in -ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்விற்கான தனது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (EDIT) செய்ய விரும்பும் தேர்வர்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
1. இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒரு சில தகவல்கள் தேர்வரின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத் திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவில் OTR, EDIR PROFILE சென்று உரிய திருத்தங்களை செய்து, அவற்றை சேமிக்கவும்.
2. அதன் பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள டமால் சென்று, விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி (PRINT OUT) எடுத்துக் கொள்ளவும்.
3. விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்கவில்லையென்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டூமே கருத்தில் கொள்ளப்படும்.
தேர்வர்களுக்கு ஏற்படும் தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு, ஒருமுறை நிரந்தரப்பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், இதர சந்தேகங்களுகு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தவும். ஒரே பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு, இரண்டு மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்புவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு, அலுவலக வேலைநாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
TNPSC GROUP 2 2A WHERE TO STUDY : https://www.youtube.com/playlist?list=PLgLcqf3upNh1mP9VrtL-jnCQM9_jFAigT
புத்தகத்தில் இல்லாதவை : https://www.youtube.com/playlist?list=PLgLcqf3upNh1gs8hs4undPjaCadLNV1_x
GENERAL TAMIL QUIZ தமிழ்அறிஞர்கள் : https://www.youtube.com/playlist?list=PLgLcqf3upNh3ahTni23pPNY42t5FZMclK
TNPSC GROUP 2 2A QUESTIONS BOOK PROOF : https://www.youtube.com/playlist?list=PLgLcqf3upNh0E4CgFHp7ZwLQN4uBTXp9h
No comments:
Post a Comment