Breaking

Monday 20 April 2020

Unit 8 | தமிழ் சமுதாய வரலாறு


தமிழகத்தின் வரலாறு சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். 

சேரர்கள்
தற்போதைய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர்.

அவர்களது தலைநகரம் வஞ்சி. 

முக்கிய துறைமுகங்கள் தொண்டி மற்றும் முசிறி. 

சேரர்கள் பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர்.

சோழர்கள்

தற்போதைய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. 

சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது.

சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன்.

பாண்டியர்கள்

தற்போதைய தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர்.

அவர்களின் தலைநகரம் மதுரை. 

நெடியோன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னர்களாவர்.

அரசியல்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தனர். 

அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர்.

நுண்கலைகள்

கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின.

அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். 

முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்...






No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491