மெட்ரோ ரயில்கள்
•மெட்ரோ ரயில்கள் Rapid Transit, Mass Rapid Transit பிரிவைச்சேர்ந்த ரயில் அமைப்பு ஆகும்.
•மெட்ரோ ரயில்கள் சப்வே, அண்டர்கிரவுண்ட் மெட்ரோ, ஹெவி ரயில், டியூப் ரயில் இன்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
•மெட்ரோ ரயில்கள் மின்சாரத்தினால் இயங்குகின்றன.
•இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை களிலும், பெரிய தூண்கள் மீதும் மெட்ரோ ரயில்கள் பயணிக்கின்றன.
•உலகமெங்கிலும் 56 நாடுகளில் மெட்ரோ ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
•சீனாவில் தான் மிக அதிகமான மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன.
இந்தியாவில் முதல் மெட்ரோ
துவக்கம்: 1987 அக்டோபர் 24 (கொல்கத்தா)
•இந்தியாவின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ மற்றும் மின்மயமாக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலும் இதுதான்.
டெல்லி மெட்ரோ
துவக்கம்: 2002 டிசம்பர் 24
•அதிநவீன வசதிகளுடன் அறிமுகமான இந்தியாவின் முதல் மெட்ரோ டெல்லி மெட்ரோ.
•பயணிகள் எண்ணிக்கையில் உலகில் 16 ஆவது இடம்.
•குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஓடும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயிலும் இதுதான்.
இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் பற்றின தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்...
No comments:
Post a Comment