தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கிருஷ்ணகிரி (TNRD)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 09
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
ஓட்டுநர் - 06, அலுவலக உதவியாளர் - 03
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவைப்பைக் காணவும்.)
ஊதியம் :
ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Krishnagiri.nic.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
ஆறை எண்- 58, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 02.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டு.
தேர்வு முறை : தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் தனியே அனுப்பி வைக்கப்படும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Krishnagiri.nic.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment