தமிழக அரசின் "கல்வி தொலைக்காட்சி"(Kalvi Tholaikatchi)யை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் முதல்வர் பழனிச்சாமி இன்று(26.08.2019) தொடங்கி வைத்தார்.
இந்த தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்கலாம்.
இந்த தொலைக்காட்சியில் ஆரம்ப பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல் வழங்கப்பட உள்ளது. புதிய பாடத்தின்படி பயிற்சிகள் வழங்கப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல் கல்விக்கான தொலைக்காட்சி சேனல் ஆகும்.
No comments:
Post a Comment