வழக்கு விசாரணைகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், 15 சிபிஐ அதிகாரிகளுக்கு பதக்கத்தை அறிவித்துள்ளது.
- விசாரணைகளில் சிறப்பான செயல்பாட்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டு(2018) அறிமுகப்படுத்தப்பட்டது.
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை, மத்திய காவல் துறை, ஆயுதப் படை, சிறப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் படை, விசாரணை அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
- பணியில் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும், குற்ற விசாரணைகளின் தரத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பதக்கம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
- 2019-ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலை அரசு வெளியிட்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 96 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பானச் செயல்பாட்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் வழங்கப்படவுள்ளது. அதில் 15 சிபிஐ அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
பணியில் சிறப்பாகச் செயல்பட்ட அலோக் குமார் சிங் (தில்லி), பிரஜேஷ் குமார் (பெங்களூரு), சித்தரஞ்சன் தாஸ் (கொல்கத்தா) உள்பட 7 காவல் துறையின் சிபிஐ பிரிவு துணைக் கண்காணிப்பாளர்களுக்கும், சுபாஷ் சந்தர் (சண்டீகர்), சந்தோஷ் குமார் சிங் (போபால்), மனோஜ் குமார் (தில்லி) உள்பட 5 சிபிஐ பிரிவு ஆய்வாளர்களுக்கும், சுப்ரமணியம் (பெங்களூரு), வி.விவேகானந்த சுவாமி (ஹைதராபாத்) உள்பட 3 சிபிஐ பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment