Breaking

Monday 1 July 2019

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. மொத்தம் பதினெட்டு நூல்கள் இவற்றை மேல் கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.

சங்க நூல்களுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு பதினெண்கீழ்க்கணக்கு என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் 18 நூல்கள் உள்ளன. 

பதினெண் என்றால் 18 என்று பொருள். இந்நூல்களை கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை அற (நீதி) நூல்கள் ஆகும்.

நீதி நூல்கள்
1. திருக்குறள் 
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4.இன்னா நாற்பது
5.இனியவை நாற்பது
6.திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8.சிறுபஞ்சமூலம்
9.பழமொழி
10.முதுமொழிக்காஞ்சி
11. ஏலாதி 

நீதி நூல்களை பற்றி மேலும் படிக்க: பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

அகத்திணை நூல்கள்
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6.கார் நாற்பது

புறத்திணை நூல்
1. களவழி நாற்பது

மொத்தம் 18 நூல்கள். இவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
அகத்திணை மற்றும் புறத்திணை நூல்களைப் பற்றி பார்க்கலாம்.

அகத்திணை நூல்கள்

1. ஐந்திணை ஐம்பது
ஐந்திணை ஐம்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.
நூல் குறிப்பு
அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இந்த ஐந்து திணைகளை பிரித்து பண்டைய தமிழர்களின் வாழ்வியல் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் இந்த ஐந்திணைகள் கூறுகின்றன. 

முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல் இது மட்டுமே ஆகும். இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது,

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் 
செந்தமிழ் சேராதவர்

ஒவ்வொரு திணையிலும் பத்துப் பத்துப் பாடல்களையும் மொத்தமாக 50 பாடல்களைக் கொண்டுள்ளது எனவே இது ஐந்திணை ஐம்பது எனப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்
இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு

பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்

சிறந்த தொடர்கள் 
1. வெஞ்சுடர் அன்னானையான் கண்டேன் கண்டாளாம்
2. தண்சுடர் அன்னாளைத் தான்
3. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
4. பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
5. கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்
6. உள்ளம் படர்ந்த நெறி

2. திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.
நூல் குறிப்பு
அகப்பொருள் பாடல்களைக் கொண்ட நூல்களுள் ஒன்று திணைமொழி ஐம்பது ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இந்த ஐந்து திணைகளை பிரித்து பண்டைய தமிழர்களின் வாழ்வியல் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் இந்த ஐந்திணைகள் கூறுகின்றன. 

மேலும் இதில் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திணையிலும் பத்துப் பத்துப் பாடல்களையும் மொத்தமாக 50 பாடல்களைக் கொண்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் கண்ணன் சேந்தனார்
இவரது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு

பாவகை
46 பாடல்கள் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. 4 பாடல்கள் நேரிசை வெண்பாக்களால் ஆனது.

சிறந்த தொடர்கள் 
1. அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
2. தெரிவார்யார் தேடும் இடத்து
3. துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
4. தணியும் என்தோள் வளை

3. ஐந்திணை எழுபது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.

நூல் குறிப்பு

ஐந்திணைகள் என்பன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்பவை ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுதிகளாகும். இந்த 5 திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.

மேலும் இதில் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் மூவாதியார்
இவரது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு


பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்

சிறந்த தொடர்கள் 
1. நன்மலை நாட மறவல் வயங்கிழைக்கு
2. நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
3. இன்னுயிர் தாங்கும் மருந்து
4. செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற்
5. பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர்
6. காரோடலமருங் கார்வானங் காண்டோறும்
7. நீரோடலம் வருங் கண்

4. திணைமாலை நூற்றைம்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.

நூல் குறிப்பு
அகப்பொருள் பாடல்களைக் கொண்ட நூல்களுள் ஒன்று ஆகும். 

திணைக்கு 30 பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது. மேலும் 3 பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை.
மொத்தம் 153 பாடல்களைக் கொண்ட நூல். அவை,

1) குறிஞ்சி  1  முதல் 31  வரை  31 பாடல்கள் 

2) நெய்தல்  32 முதல் 62 வரை 31 பாடல்கள் 

3)  பாலை 63 முதல்  92  வரை  30 பாடல்கள் 

4)  முல்லை 93  முதல் 123 வரை 31 பாடல்கள் 

5) மருதம்  124  முதல்  153 வரை 30 பாடல்கள் 

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
இவருக்கு கணிமேதையர் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.

பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்.

சிறந்த தொடர்கள் 
1. ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
2. இருகடரும் போந்தன என்றார்
3. பொருள் பொருள் என்றால் சொல்
4. பொன்போலப் போற்றி
5. அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
6. வளமை கொணரும் வகையினால் மற்றோர்
7. இளமை கொணர இசை
8. நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
9. கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை 
   அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு 
   என்னையோ? நாளை எளிது

5. கைந்நிலை (ஐந்திணை அறுபது)
கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

நூல் குறிப்பு
அகப்பொருள் பாடல்களைக் கொண்ட நூல்களுள் இதுவும் ஒன்று ஆகும்.

இது 60 பாடல்களைக் கொண்டுள்ளது.இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. ஐந்திணை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) ஒழுக்க நிலை கூறும் நூல் என்பதனால் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.

குறிஞ்சி - 12

முல்லை - 3

மருதம் - 11 

நெய்தல் - 12

பாலை - 7 

ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற பாடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. 

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார். 
இவரது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. 

பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்.

சிறந்த தொடர்கள் 
1. கடுகி அதர் அலைக்கும் கல்சூழ் பதுக்கை
  விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
  நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே
   வடுவிடை மெல்கின கண்.

2. பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
   தென்னவன் கொற்கைக் குருகு இரிய – மன்னரை
   ஓடு புறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ
   கூடல் அணைய வரவு.


6.கார் நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

நூல் குறிப்பு
அகப்பொருள் பாடல்களைக் கொண்ட நூல்களுள் இதுவும் ஒன்று ஆகும்.
கார் என்றால் மழைக்காலம் என்பதாகும். இது 40 பாடல்களைக் கொண்டுள்ளது.

கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழா பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் மதுரை கண்ணங் கூத்தனார்.

பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்.

சிறந்த தொடர்கள் 
1. செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார் 
   மேனிபோல் புல்என்ற காடு
2. தூதோடு வந்த மழை
3. பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
4. வாடும் பசலை மருந்து

புறத்திணை நூல்
1. களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இது ஒன்று மட்டுமே புறத்திணை நூல் ஆகும். களம் என்றால் போர் என்று பொருள்.

இதில் 40 பாடல்கள் உள்ளன. அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவரது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன.
இந்நூலின் வேறு பெயர் 'பரணி நூலின் தோற்றுவாய்'

ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் பொய்கையார்.
இவர் சங்க காலத்துப் புலவர் ஆவார்.

பாவகை
வெண்பாக்களால் ஆன நூல்.

சிறந்த தொடர்கள் 
1. கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
2. வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
3. கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
4. சினமால் பொறுத்த களத்து

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491