Breaking

Sunday 3 March 2019

TNPSC - Solar System (சூரியக் குடும்பம் )(Geography,Physics) PDF | Group I, II, IIA, III, IV&VAO, VI, VII, VIII, IBPS, RRB, SSC, TET, UPSC.





சூரியக் குடும்பம் (Solar System)

சூரியனையும் அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் சூரியக்குடும்பம் என அழைக்கிறோம். சுற்றிவரும் கோள்கள் மற்றும் மற்ற வான்பொருள்களின் இயக்கத்தை முதன்மையாகக் கட்டுப்படுத்துவது சூரியனின் ஈர்ப்பியல் கவர்ச்சியாகும். 

தற்போது சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இக்கோள்கள் சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.


சூரியன்:


Ø மீஉயர் வெப்பநிலையில் உள்ள, சுயமான பொலிவுடன் இருக்கும் பொருள் சூரியன் ஆகும். 


Ø சூரியன், பெருமளவு ஹைடிரஜன் கலந்த வாயுக்களால் ஆக்கப்பட்டது. இது, புவிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆகும். 


Ø இதன் நிறை ஏறத்தாழ 1.989×1030 kg. சூரியனின் ஆரம் ஏறத்தாழ 6.95 × 108m. புவியிலிருந்து சூரியன் 1.496 × 1011 m. தொலைவில் உள்ளது. இதனை வானியல் அலகு (AU) என்கிறோம். 

Ø சூரியனின் ஒளி, புவியை 8 நிமிடங்கள் 20 நொடிகளில் வந்தடைகிறது. 


Ø சூரியனின் பரப்பில் ஈர்ப்பு விசையானது புவிப்பரப்பில் உள்ளதைப்போல் 28 மடங்கு இருக்கிறது.


Ø சூரியன் தன்னச்சைப் பற்றி கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. துருவப் பகுதியில் அதன் சுழற்சிக் காலம் 34 நாள்கள் மற்றும் நடுக்கோட்டுப் பகுதியில் 25 நாள்கள் ஆகும். 


Ø 14 × 106 K வெப்பநிலையில் பொலிவான தட்டு போன்று இருக்கும் சூரியனின் மையப்பகுதி ஒளிமண்டலம் (photosphere) எனப்படும். 


Ø 6000 K வெப்பநிலையில் உள்ள சூரியனின் வெளிப் புறஅடுக்கு நிறமண்டலம் (chromosphere) எனப்படும்.

கோள்கள்

நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களும், நிலவுகளும், சிறு கோள்களும் வால் மீன்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன் (Mercury), வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupitor), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), மற்றும் நெப்டியூன் (Neptune) என்பன எட்டு கோள்களாகும்.



Ø சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவு உள்ளிட்ட மற்ற அனைத்தும் சூரிய ஒளியை எதிரொளிக்கின்றன.


Ø 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி, செவ்வாய் கோளானது புவிக்கு மிக அருகில் வந்ததால் அதனை நம்மால் நன்கு காண முடிந்தது. இது போன்று 2287-ம் ஆண்டு மீண்டும் நிகழும்.


Ø கோள் ஒன்றினை சுற்றி வரும் பொருளை நிலவு என்கிறோம். நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளியைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் நிலவுகள் உள்ளன.

Ø சூரியக் குடும்பத்தின் எந்த கோளுமே தானாக ஒளியைத் தராது. சூரியனின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.

கோள்களின் இயக்கம்


. கோள்களின் இயக்கம் பற்றிய முதல் கொள்கையான புவி-மையக் கொள்கையை கிரேக்க வானியலாளர் தாலமி உருவாக்கினார்.


. இக்கொள்கையின் படி, அண்டத்தின் மையத்தில் புவியும், புவியை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் நிலவுகளும் விண்மீன்களும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றி வருகின்றன என்பது தாலமியின் கூற்று.

. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, இந்தியாவின் மிகச்சிறந்த கணித வல்லுநரும் வானியலாளருமான ஆரியபட்டர் என்பவர் புவி தனது அச்சில் சுழல்வதாகக் கூறினார். கீழை நாடுகளுக்கும் மேல்நாடுகளுக்கும் இடையேயான செய்தித் தொடர்பு இல்லாததால், அவரின் கருத்து மேல்நாட்டு அறிஞர்களைச் சென்றடையவில்லை.

. போலந்து நாட்டு வானியலாளர், நிகாலஸ் கோபர்நிகஸ் என்பவர் கதிரவ மையக் கொள்கை என்ற புதிய கொள்கையைக் கூறினார். இக்கொள்கையின்படி, அனைத்துக் கோள்களும் ஓய்வு நிலையில் இருக்கும் சூரியனை வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.


. கோள்களின் இயக்கம் பற்றிய மிகத் துல்லியமான காட்சிப் பதிவுகளை டேனிஷ் வானியலாளர் டைகோ பிரஹே பதிவு செய்தார். இவரின் காட்சிப் பதிவுகளை, ஜெர்மன் வானியலாளர் ஜொகனஸ் கெப்ளர் என்பவர் கவனமாகப் பகுத்துப் பார்த்து, கோள்களின் இயக்கம் பற்றிய எண்மான விதிகளை (empirical) வகுத்தார்.



சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற பொருள்கள்

i) சிறுகோள்கள் (asteroids) 

செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கிடையே, சூரியனைச் சுற்றிவரும் சிறிய வான்பொருள்கள் சிறுகோள்கள் எனப்படும். வியாழன் கோளின் ஈர்ப்பு காரணமாக, உடைந்துபோன மிகப் பெரிய கோளின் துண்டுகள் சிறு கோள்களாகும். ஏறத்தாழ 1600 சிறுகோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன. 

ii) குறுங்கோள் (or) குள்ளக்கோள்கள் (dwarf planet)

· புளூட்டோ,செரஸ்,ஏரிஸ்,மேக்மேக்,

ஹவ்மியா முதலியன 2006 ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என புதியதாக வகைபடுத்தப்பட்டுள்ளன. இவையும் சூரியனை சுற்றி வருகின்றன. 

· இவை அளவில் மிகச்சிறியவை. சந்திரனைவிடச் சிறியவை எனவே தான்,இவை குறுங்கோள் எனப்படுகின்றன.

செரஸ் - 1801 ஜனவரி 1 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அரை நூற்றாண்டு காலமாக இது கோளாகக் கருதப்பட்டு, பின்னர் சிறுகோளாக வகைப்படுத்தப்பட்டு, இறுதியில் 1006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.

புளூட்டோ - 1930 பிப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 76 ஆண்டுகளாக கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. 2006 ஆகஸ்டு 24 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.

ஹவ்மியா - 2004 டிசம்பர் 28 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 செப்டம்பர் 17 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.

ஏரிஸ் - 2005 ஜனவரி 5 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 10வது கோளாக இது ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. 2006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக இது அறிவிக்கப்பட்டது.

மேக்மேக் - 2005 மார்ச் 31 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 ஜூலை 11 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.

iii) வால் நட்சத்திரம் (or) வால்மீன்கள்(Comets)

· நீர், அம்மோனியா, மீத்தேன் போன்றவற்றால் சூழப்பட்டுள்ள பாறை போன்றது வால்மீன் ஆகும். இவைகள் எளிதில் ஆவியாகக் கூடியவை. 

· வால்மீன்கள், நீண்ட நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை, பெரும்பான்மை நேரங்களில் சூரியனிடமிருந்து வெகுதொலைவிலேயே இருக்கின்றன. 

· வால்மீன், சூரியனை நெருங்கும்போது, சூரியக் கதிர்வீச்சு ஆற்றல் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு, ஆவியாகி ஏறத்தாழ 10000 km விட்டமுடைய தலைப்பகுதி உருவாகிறது. வால்மீனில் தோன்றும் வால்பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிரான திசையிலேயே இருக்கும். சில வால்மீன்களை குறிப்பிட்ட சீரான கால இடைவெளிகளில் காணலாம்.

· ஹேலியின் வால்மீன் (Halley's comet) சீரான கால இடைவெளியில் தெரிவதாகும். 1910-ம் ஆண்டும் 1986-ஆம் ஆண்டும் அதனைக் காண முடிந்தது. அதனை மீண்டும் 2062-ஆம் ஆண்டில் நம்மால் பார்க்க முடியும்.



iv) விண்கற்கள்(or) எரிநட்சத்திரம் :(Meteors or Shooting stars)

· வால்மீன், சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது சிறுசிறு துண்டுகளாக உடைகிறது. புவியின் சுற்றுப்பாதை, வால்மீனின் சுற்றுப்பாதையுடன் குறுக்கிடும்போது, உடைந்த துண்டுகள் புவியின்மீது விழுகின்றன. பெரும்பாலான துண்டுகள் புவியின் வளிமண்டலத்தின் உராய்வு காரணமாக எரிந்து விடுகின்றன. அவற்றை விண்சிறுகற்கள் அல்லது எரிநட்சத்திரம் என்கிறோம். தெளிவான, நிலவற்ற வானத்தில் இந்த எரிமீன்களை நம்மால் காண முடியும். 

· வால்மீனின் உடைந்த துண்டுகள் அளவில், பெரியனவாக இருப்பின், புவியின் வளிமண்டலத்தின் உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கிக்கொண்டு, முழுமையாக எரியாமல், புவியின் பரப்பை வந்தடையும். அவற்றை விண்பெருகற்கள் என்கிறோம்.

· புதன்கோள், செவ்வாய் கோள் மற்றும் நிலவின் பரப்புகளில், ஏராளமான விண்பெருகற்கள் மோதுவதால் நிலக்குழிகள் (Craters) உருவாகின்றன. 


v) சந்திரன் (Moon)

· நிலவு, திங்கள், மதி,நிலா என பல பெயர்களை கொண்டது. சந்திரன் கோள் இல்லை. சந்திரன் சூரியனை நேரடியாக சுற்றுவது இல்லை. பூமியைத்தான் சுற்றிவருகிறது. எனவே சந்திரனை துணைக்கோள் என்கிறோம். சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள்களில் ஒன்று ஆகும். 

· பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரி 27.3 நாள்கள் ஆகின்றது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. எனவேதான் சந்திரனின் மறுபக்கத்தை காணமுடியாது. சந்திரனில் வளிமண்டலம் கிடையாது. சந்திரனில் ஈரப்பசை உள்ளது ஆனால் திரவ நிலையில் நீர் இல்லை.

· சந்திரனின் பரப்புகளில், ஏராளமான விண்பெருகற்கள் மோதுவதால் நிலக்குழிகள் (or) கிண்ணக் குழிகள் (Craters) உருவாகின்றன.




No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491