Breaking

Saturday 9 March 2019

TNPSC - Earth (பூமி ) PDF | Group I, II, IIA, III, IV&VAO, VI, VII, VIII, IBPS, RRB, SSC, TET, UPSC.

சுழன்றும்‌, சுற்றியும் வரும் பூமி

பூமி : பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ளது. இதனில்‌ மட்டுமே உயிரிகள்‌ வாழ்வதற்கான சாத்திய கூறுகள்‌ உள்ளன. மற்ற கோள்களில்‌ இல்லை. ஆகையால்‌ உயிரினங்கள்‌ பூமியில்‌ மட்டுமே உள்ளன.

Ø     பூமியின்‌ தற்சுழற்சி அதாவது தன்னைத்‌ தானே சுற்றுவதற்கு ஆகும்‌ காலம்‌ 23 மணி, 56 நிமிடம்‌ ஆகிறது.‌

Ø     பூமியின்‌ தற்சுழற்சியின்‌ காரணமாகத்தான்‌ இரவு பகல்‌ மாற்றம்‌ ஏற்படுகிறது. பூமியின் ஒரு பகுதி அதாவது சூரியனை நோக்கியுள்ள பக்கம்‌ பகலாகவும்‌, பின்பக்கம் இரவாகவும்‌ இருக்கும்‌. (எ.கா) இந்தியாவில்‌ பகலாக இருக்கும்‌ போது அமெரிக்காவில்‌ இரவாக இருக்கும்‌.

Ø     சுமார்‌ 1500 ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த ஆரியபட்டர்‌ என்ற வானவியல்‌ அறிஞர் பூமி தன்னைத்‌ தானே சுற்றுகிறது என்று அறிவியல்‌ முறையில்‌ விளக்கினார்‌.

Ø     ஒரு நாள்‌ என்பது ஒரு நாளின்‌ நள்ளிரவு 12:00 மணி முதல்‌ மறுநாள்‌ நள்ளிரவு 12:00 மணி வரை எனக்‌ கணக்கிடப்‌படுகிறது.

Ø     பூமி சூரியனைச்‌ சுற்றி வர எடுத்துக்‌ கொள்ளும்‌ காலம்‌ 365.24 நாட்களாகிறது. இதனால்‌ தான்‌ நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப்‌ வருடம்‌ என்று 366 நாட்களாக கணக்கிடுகிறோம்‌. அந்த ஆண்டில்‌ மட்டும்‌ பிப்ரவரி மாதத்தில்‌ 29 நாட்கள்‌ வரும்‌. மற்ற ஆண்டுகளில்‌ பிப்ரவரி 28 நாட்கள்‌ வரையிருக்கும்‌. லீப்‌ ஆண்டை மட்டும்‌ 4 ஆல்‌ மீதியின்றி வகுக்க முடியும்‌.

Ø     16 ஆம்‌ நூற்றாண்டில் வாழந்த போப்கிரிகாரி எனபவர் லீப்‌ வருடம்‌ என்பது 4 ஆல் மட்டுமின்றி 400 ஆல் வகுத்தாலும்‌ மீதியின்றி வகுக்க வேணடும்‌ என்றார். கி.பி.1800, 1900, 2000, 2100 ஆகிய ஆண்டுகளை எடுததுக் கொண்டால்‌ 2000 மட்டும்‌ 400 ஆல் மீதியின்று வகுபடும்‌. ஆகையால 2000 லீப்‌ ஆண்டாகும்‌. மற்றவை லீப்‌ ஆண்டாகாது என கூறினார்.‌

Ø     பூமியின்‌ சுழல்‌ அச்சு பூமி சூரியனை சுற்றி வரும்‌ தளத்தின்‌ நேர்க்குத்திற்கு 231/2o சாயந்துள்ளது. அதாவது பூமி தன்‌ அச்சில்‌ 231/2o சாய்வாக உள்ளது. இதனால்‌ தான் பருவகால மாற்றம்‌ ஏற்படுகிறது.

Ø     பூமி சூரியனைச்‌ சுற்றி வரும்‌ போது நீள்வட்டப்‌ பாதையில் சுற்றுவதால் ஜூலை மாதத்தில் சூரியனுக்கு வெகு தொலைவிலும்‌, ஜனவரி மாதத்தில்‌ மிக அருகிலும்‌ இருக்கும்‌. ஆகையால் ஜூலையில்‌ குளிர்காலமாகவும்‌, ஜனவரியில்‌ கோடைகாலமாகவும்‌ அமைய வேண்டும்.

Ø     அப்படியெனில் பூமி முழுவதும்‌ ஒரே சமயத்தில்‌ கோடையாகவோ அல்லது குளிர்காலமாகவே அமைய வேண்டும். ஆனால்‌ உண்மையில் அப்படி அமைவதில்லை. ‌

Ø     வடகோளத்தில்‌ டிசம்பர்‌ மாதம்‌ குளிர் காலமாக இருக்கிறது. அதே சமயம்‌ அரைகோளத்தில் கோடை காலமாக இருக்கிறது.

Ø     ஏப்ரல்,மே மாதங்களில் வடஅரைகோளம் கோடையாக இருக்கும்போது தென்அரைகோளம் குளிர் காலமாக இருக்கிறது. ஏனென்றால் பூமி 231/2o சாய்வாக உள்ளதால் இம்மாற்றம் ஏற்படுகிறது.

Ø     பருவகால மாற்றம்‌ என்பது பூமி தன்‌ அச்சில்‌ 231/2o சாய்வாக இருப்பதனால்‌ ஏற்படுகிறது. சூரியனை சுற்றி வருவதனால்‌ இல்லை. 

Ø     பூமியின்‌ அச்சு என்பது ஓர் கற்பனைக்‌ கோடு ஆகும்‌. நிலத்தின்‌ மீது வரையப்பட்ட கோடு அல்ல. பூமியின்‌ வட துருவத்தையும்‌, தென்‌ துருவத்தையும்‌ இணைக்கும்‌ கற்பனைக்‌ கோடு பூமியின்‌ அச்சு ஆகும்‌.

Ø     டிசம்பர் 22 அன்று அதிகபட்ச தென்கிழக்கு புள்ளியில்‌ சூரியன்‌ உதயமாகிறது. அன்று முதல்‌ சூரியனின்‌ உதயம்‌ வடக்கு நோக்கி அமைகிறது. ஆகையால்‌ அதனை வட ஓட்டம்‌ (உத்ராயனம்‌) எனப்படுகிறது.

Ø     ஜூலை 21 அன்று அதிகபட்ச வடகிழக்கு புள்ளியில்‌ சூரியன்‌ உதயமாகிறது. அன்று முதல்‌ சூரியனின்‌ உதயம்‌ தெற்கு நோக்கி அமைகிறது. ஆகையால்‌ அதனை தென் ஓட்டம்‌ (தட்சிணாயனம்‌) எனப்படுகிறது.

Ø     மாச்‌ 21 மற்றும்‌ செப்டம்பர்‌ 23 ஆகிய இருநாள்கள்‌ சம இரவு பகல்‌ நாள்களாகும்‌. 12 மணி நேரம்‌ இரவும்‌, 12 மணி நேரம்‌ பகலாகவும்‌ இருக்கும்‌.‌

Ø     ஜூன்‌ மாதத்தில்‌ சூரியன்‌ வட அரைக்‌ கோளத்தில்‌ இருப்பதனால்‌ வடதுருவம்‌ ஆறு மாதம்‌ தொடர்ந்து பகலாகவும்‌, தென்‌ துருவத்தில்‌ ஆறு மாதம்‌ தொடர்ந்து இரவாகவும்‌ இருக்கும்‌.

Ø     டிசம்பர் மாதத்தில்‌ சூரியன்‌ தென்‌ அரை கோளத்தில்‌ இருப்பதனால் ‌ தென்‌ துருவத்தில்‌ ஆறுமாதம்‌ தொடர்ந்து பகலாகவும் வட துருவத்தில் ஆறுமாதம்‌ தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.

Ø இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகள் வட அரை கோளத்தில்‌ உள்ளதால் கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதத்தில்‌ குளிர்கால விழாவாக கொண்டாடுகின்றனர். அதே சமயம்‌ ஆஸ்திரேலியா போன்ற தென்‌ அரை கோளத்தில்‌ உள்ள நாடுகள்‌ கோடை கால விழாவாக கொண்டாடுகின்றனர்.


பகலும் இரவும்
·    சூரிய ஒளியானது, புவியின் ஒரு பக்கத்தில் மட்டுமே படுகிறது. எனவே,அந்தப் பக்கத்தில் அனைத்து இடங்களுக்கும் பகல் நேரமாக இருக்கிறது. அந்த நேரத்தில் புவியின் மறு பக்கத்தில் சூரிய ஒளி படாது. எனவே, அங்கு இரவு நேரமாக இருக்கிறது. இரவு பகலாக மாறும் ; பகல் இரவாக மாறும்.

·    ஏனெனில்,புவியானது வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் வழியே செல்லும் அச்சைப்பற்றிச் சுழல்கிறது. ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள (சுழல) புவிக்கு 24 மணி நேரம் ஆகிறது. இரவு நேரத்தில், பொலிவான விண்மீன்கள் மற்றும் நிலவில் இருந்து நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது.

புவியும் பருவ காலங்களும்
·    புவியானது, தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றி வருகிறது.

·    சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும் போது, பகல் நேரமும் இரவு நேரமும் சமமாக இருக்கும். சூரியன் கிழக்கில் உதயமாகும். மேற்கில் மறையும்.

·    கோடைக்காலத்தில், இரவு நேரத்தை விட பகல் நேரம் அதிகமாக இருக்கும். சூரியன் வட கிழக்கில் உதித்து, வடமேற்கில் மறையும்.

·    குளிர்காலத்தில் பகல் நேரத்தை விட இரவு நேரம் அதிகமாக இருக்கும்.

·    சூரியன் தென்கிழக்கில் உதித்து, தென் மேற்கில்மறையும். இவ்வாறு ஏற்படக் காரணம் புவியின் சுழலும் அச்சு, சூரிய ஒளியின் திசைக்கு 900 கோணத்தில் இருப்பதில்லை.



அமாவாசையும் முழு நிலவும்
· நிலவு என்பது, இயற்கையிலேயே புவிக்கு இருக்கக்கூடிய துணைக்கோள் ஆகும். 

· நிலவு தானாகவே ஒளியை உமிழாது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை எதிரொளிப்பதால், நம்மால் நிலவைப் பார்க்க முடிகிறது. 


· நிலவு, தன் அச்சைப் பற்றி தானே சுழல்கிறது. புவியையும் சுற்றி வருகிறது. இந்த இரண்டு வகை இயக்கங்களுக்கும் ஆகும் காலம் ஒன்றுதான், அதாவது 29.5 நாள்கள். 


· நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மறு பக்கத்தை பார்க்கவே முடியாது.


· நிலவு, புவியைச் சுற்றி வரும்போது, வானத்தின் ஒரே புறத்தில் சூரியனும் நிலவும் இருக்கும் போது, நம்மால் நிலவைப் பார்க்க முடிவதில்லை. 


· ஏனெனில், நிலவினால் எதிரொளிக்கப் பட்ட ஒளி நமக்கு வருவதில்லை. இந்த நிலவினை, நாம் அமாவாசை என்று அழைக்கிறோம்.

· நிலவு, புவியைச் சுற்றி வரும் போது, சூரியனும் நிலவும் வானத்தின் எதிர் எதிர் புறத்தில் இருக்கும்போது, நம்மால் நிலவைப் பார்க்க முடிகிறது.


· ஏனெனில், நிலவினால் எதிரொளிக்கப்பட்ட ஒளி, நமக்கு வருகிறது. இந்த நிலவினை, நாம் முழு நிலவு முழு நிலவு அதாவது முழு நிலவு பெளர்ணமி என அழைக்கிறோம்.



புவியின் கட்டமைப்பு 

· நம் புவியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கின்றன. மற்ற கோள்களில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

· மற்ற கோள்களில் இருந்து, நம் கோளினை வேறுபடுத்திக் காட்டும் சிறப்புத்தன்மைகள் 


· வளி மண்டலம், நீர், விலங்குகள் மற்றும் 
தாவரங்கள் நம் புவியில் மட்டுமே உள்ளன. 

· விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, நம் புவி மேகங்களாலும், பெருங்கடல்களாலும் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். புவியில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே நிலப்பரப்பு உள்ளது. 

· புவியின் மேற்பரப்பில் மலைகள், பாலைவனங்கள், பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் நிலப்பரப்புகள் உள்ளன.

புவியின் உட்பகுதி 

(1) கெட்டியான மேற்பகுதி 

(2) மெல்லிய பகுதி 

(3) மையப்பகுதி என மூன்று 

அடுக்குகளாகப் பிரிக்கலாம். 



(1) கெட்டியான மேற்பகுதி (Crust) 

· புவியின், திடப்பொருளால் ஆன, கெட்டியான மேலேட்டினை கெட்டியான மேற்பகுதி என்கிறோம். 

· இப்பகுதி, மலைகளுக்கு கீழ் 30 கிமீ தடிமனும், பெருங்கடலுக்கு கீழ் 6 கிமீ தடிமனும் உடையது. 

· இப்பகுதியில் நீர், பாறைகள் மற்றும் மண் உள்ளன. சுண்ணாம்புக் கல்,சாதாரண உப்பு, நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இரும்பு, தாமிரம், அலுமினியம், தங்கம் போன்ற உலோகங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. 

(2) மெல்லிய பகுதி (Mantle) 

· மையப் பகுதிக்கும் மேற்பகுதிக்கும் இடையில் இருப்பது மெல்லிய பகுதி ஆகும். 

· இது 2900 கிமீ தடிமன் உடையது. இப்பகுதி வெப்பம் மிகுந்த பாறைகளால் ஆனது. மேற்பகுதியில் உள்ளதை விட, இப்பகுதியில் வெப்ப நிலையும் அழுத்தமும் அதிகம். 


· இப்பகுதி திடநிலையில் இருக்காது; பாதி உருகிய நிலையில் இருக்கிறது. 


(3) மையப்பகுதி (Core) 

மையப்பகுதியை 

(i) வெளிமையப் பகுதி 

(ii) உள்மையப் பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். 

(i) வெளி மையப் பகுதி 

· மெல்லிய பகுதிக்கும் உள்மையப் பகுதிக்கும் இடைப்பட்டது வெளி மையப்பகுதி ஆகும். 


· இது 2240 கிமீ தடிமன் உடையது. இப்பகுதி, பெரும்பாலும் உலோகத்தால் ஆனது. 

· இப்பகுதி, மிக அதிக அழுத்தத்திலும் வெப்ப நிலையிலும் இருக்கிறது. உலோகங்கள் உருகிய நிலையில் இருக்கின்றன. 


· ஐந்தில் நான்கு பகுதி, இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது. மீதமுள்ள ஐந்தில் ஒரு பகுதியில் சிலிகான் உள்ளது. 

(ii) உள் மையப் பகுதி 

· உள்மையப் பகுதி, திடப் பொருளால் ஆன பந்து போன்றது. 

· இது 2440 கிமீ தடிமன் உடையது. இப்பகுதி இரும்பு மற்றும் நிக்கல் போன்ற 

· உலோகங்களால் ஆனது. இப்பகுதியின் வெப்பநிலை 37000C.



வளிமண்டலம் (Atmosphere) 

· புவியைச் சுற்றிலும் உள்ள காற்று இருக்கும் பகுதியை வளிமண்டலம் என்கிறோம். 


· இந்த வளி மண்டலம் புவிப்பரப்பிற்கு மேல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பரவியுள்ளது. 

· நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கன், நியான், ஹீலியம், கிரிப்டான், சீனான், நீராவி,கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கந்தக-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ளன. 

· மனிதர்ளுக்கும் விலங்குகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 

· தாவரங்கள்,தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்ள கார்பன்-டை-ஆக்சைடு தேவைப்படுகிறது. 

· காற்றில், 78 விழுக்காடு நைட்ரஜனும், 21 விழுக்காடு ஆக்ஸிஜன், 1 விழுக்காடு மற்ற வாயுக்களும் உள்ளன. 

· புவியின் பரப்பிலிருந்து 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது. 

· வளிமண்டலத்தின் முதல் 15 கிமீ உயரம் வரை உள்ள அடுக்கினை ட்ரோபோஸ்பியர் என்கிறோம். இந்த அடுக்கு புவிப்பரப்பிற்கு அருகில் உள்ளது. 

· புவிப்பரப்பிற்கு மேல் 30 முதல் 50 கிலோமீட்டர் உயரத்தில் 420 வெப்பநிலையில் வெப்பமானக் காற்று இருக்கிறது. 

· சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை ஓசோன் படலம் உட்கவர்வதினால் தான் காற்று வெப்பமடைகிறது. சிறப்புவகை ஆக்சிஜனை ஓசோன் என்கிறோம். 

· சூரியன் புறஊதாக் கதிர்களையும் வீசுகிறது. இந்த புற ஊதாக்கதிர்கள் புவியை வந்தடைந்தால் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும். 

· ஓசோன் படலம், இத்தகைய புறஊதாக் கதிர்களைத் தடுத்து விடுகிறது. ஓசோன் படலம் இல்லாத சூழ்நிலையில், நம்மால் சூரியக் கதிர் வீச்சுக்களை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, நாம் இந்த ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டும். 

· புவிப்பரப்பிலிருந்து மேலே செல்லச் செல்ல காற்று மண்டலத்தின் தடிமன் மெல்லியதாகிறது. இதன் காரணமாகத்தான், மலை ஏறுபவர்கள் ஆக்சிஜன் உருளைகளை உடன் கொண்டு செல்கிறார்கள். 

· வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், எரிதலுக்குத் துணை புரிகிறது. காற்றில் உள்ள நைட்ரஜன், எரிதலைக் கட்டுப்படுத்துகிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளி மற்றும் வெப்பத்தில் ஒரு பகுதியை மட்டுமே, நம் புவிப் பரப்பை வந்தடைய, வளிமண்டலம் அனுமதிக்கிறது. புவியில் தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் இந்த வளிமண்டலமே. 

· இதன் காரணமாகவே, புவியில் உயிரனங்கள் வாழ முடிகிறது. காற்றில் உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

Download PDF for full content
முழுமையான PDFஐ பெற



No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491