அசாம் மாநிலத்தின் அருந்ததி திட்டம்
அசாம் அரசு அருந்ததி என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மணமகள்களுக்கு இலவசமாக தங்க வழங்குவதாக தெரிவித்துள்ளது.
- இத்திட்டத்தின் மூலமாக மணமகள்களுக்கு இலவசமாக 1 டோகா (10 கிராம்) தங்கத்தினை அனைத்து அசாம் சமூக மணபெண்களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அருந்ததி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்திற்க்கு பெரிய முனிவரான பாசிஸ்டாவின் (வசிட்டர்) மனைவி பெயரான அருந்ததி என பெயரிடப்பட்டுள்ளது. அருந்ததி கற்பு மற்றும் ஒற்றுமைக்கு இலக்கணமாக கருதப்படுகிறார்.
- சிறப்பு திருமண (அசாம்) விதி, 1954 இன் கீழ் திருமணங்களை முறையாக பதிவு செய்வதன் மூலம் அருந்ததி திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
- வருடாந்திர வருமானம் ரூ 5 லட்சத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களுக்கும் இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment