Breaking

Thursday, 27 February 2020

இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை | கடைசி தேதி 28.02.2020


மத்திய அரசிற்கு உட்பட்ட செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்

மொத்த காலிப் பணியிடம் : 04

கல்வித் தகுதி : பி.எஸ்சி

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் வழியாக 28.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491