Breaking

Friday, 22 February 2019

TNPSC - Universe (பிரபஞ்சம்) PDF | Group I, II, IIA, III, IV&VAO, VI, VII, VIII, IBPS, RRB, SSC, TET, UPSC.

Universe (பிரபஞ்சம்)

வான்பொருள்களின் இயக்கங்கள், இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக் கூறுகள் (composition) போன்றவற்றை அறியும் அறிவியலின் பிரிவு வானவியல் (astronomy) எனப்படும்.


அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும்.


இவற்றில் பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண் மீன்கள், விண் மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள், விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் ஆகியன அனைத்தும் அடங்கும். பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்தது.


. அண்டத்தின் வயது 13.73 பில்லியன் ஆண்டுகள். 


. அண்டம் ஒரு கோள வடிவில் இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. 


. அண்டத்தின் எல்லையை நம்மால் இதுவரை காணமுடியவில்லை.


அண்டத்தின் தோற்றம்

அண்டத்தின் தோற்றம் பற்றி கீழ்க்காணும் மூன்று கொள்கைகள் விளக்குகின்றன.
1) பெரு வெடிப்புக் கொள்கை
2) துடிப்புக் கொள்கை
3) நிலை மாறாக் கொள்கை


1) பெரு வெடிப்புக் கொள்கை: 

பெரு வெடிப்புக் கொள்கையின்படி. அண்டத்தினுள் பருப்பொருள் அனைத்தும் அடர்த்திமிக்க வெப்பமான தீப்பந்து போன்று இருந்தது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக பருப்பொருள் சிறு சிறு, துண்டுகளாக உடைந்து விண்மீன் திரள்களாக அனைத்துத் திசைகளிலும் வீசி எறிப்பட்டன. தொடர்ச்சியான இயக்கத்தினால் ஏராளமான விண்மீன்திரள்கள் எல்லைக்கப்பால் சென்று மறைந்து விடும். இதன் விளைவாக, ஓரலகு பருமனுக்கான விண்மீன் திரள்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். பிறகு ஒரு கட்டத்தில் அண்டத்தில் எதுவுமே இருக்காது. 


2) துடிப்புக் கொள்கை: 

அண்டத்தின் மொத்த நிறையானது. ஒரு குறிப்பிட்ட மதிப்பைவிட அதிகமாகும் போது. விண்மீன் திரள்களின் விரிவாக்கம் ஈர்ப்பின் கவர்ச்சியினால் நின்றுவிடலாம். பிறகு, அண்டம் மீண்டும் சுருங்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட மாறுநிலை அளவிற்கு சுருங்கியவுடன், மீண்டும் வெடிப்பு ஏற்படும். 8 பில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை விரிவும் சுருக்கமும் ஏற்படும். ஆகவே. விரிவும் சுருக்கமும் மாறிமாறி ஏற்பட்டு துடிக்கும் அண்டம் உருவாகும். 

3) நிலை மாறாக் கொள்கை: 

அண்டத்தின் ஒரு பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் விண்மீன் திரள்களின் இடத்தை நிரப்புவதற்காக. ஒன்றுமில்லா விண்வெளியிலிருந்து (empty space) புதிய விண்மீன்திரள்கள் தொடர்ந்து உருவாக்கப்படும். எனவே இக்கொள்கையின்படி, அண்டமானது இன்றிருப்பது போன்றே அன்றும் இருந்திருக்க வேண்டும். மேலும், அண்டத்தின் விரிவடையும் வீதம் முற்காலத்தில் இருந்தது போன்றே எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கும். எனவே. மாறா நிலை அடைந்து அண்டத்தில் இருக்கும் மொத்த விண்மீன்களின் எண்ணிக்கை மாறாமல் இருக்கும். 


விண்மீன்கள்(Starry): 

மிகப்பெரிய ஏறத்தாழ கோள வடிவிலமைந்த அதிக அளவு கதிர்வீச்சு ஆற்றலை இடையுறாது வெளிவிடக்கூடிய வாயுத்திரள் விண்மீன் எனப்படும். பல பில்லியன் விண்மீன்களின் தொகுப்பு, விண்மீன் திரளாகும் (galaxy). விண்மீன்கள் மூன்று வகைப்படும். அவையாவன, 

(1) இரட்டை மற்றும் பல்லுறுப்பு விண்மீன்கள் 

(2) பொலிவு மாறும் விண்மீன்கள் 

(3) ஒளிர் முகில்கள் மற்றும் பேரொளிர் முகில்கள்(novae and super novae) 

சூரியனைப் போன்ற ஒற்றை விண்மீன்கள் ஒரு சில மட்டுமே விண்மீன் திரளில் உள்ளன.பெரும்பாலான விண்மீன்கள் இரட்டை விண்மீன்களாகவோ அல்லது பல்லுறுப்பு விண்மீன்களாகவோ உள்ளன. பொது ஈர்ப்பு மையத்தைப் பொருத்து நிலையானச் சமநிலையில் சுற்றிவரும் விண்மீன் சோடிகள் இரட்டை விண்மீன்கள் எனப்படும். பொலிவு மாறும் விண்மீனின் தோற்றப் பொலிவு மாறிக்கொண்டே இருக்கும். 


சில விண்மீன்கள் பகலிலும் தெரியுமளவிற்குத் திடீரென மிக அதிகப் பொலிவைப் பெற்று, பிறகு சிறிது சிறிதாக மங்கிவிடும். இவ்வகை விண்மீன்கள் ஒளிர் முகில்கள் எனப்படும். மிகப்பெரிய ஒளிர்முகில்கள் பேரொளிர் முகில்கள் எனப்படும். 

இரவு நேரத்தில் வானத்தில் காணப்படும் விண்மீன்கள், சிரியஸ் (வியாதா), கனோபஸ் (அகஸ்தி), ஸ்பைகா (சித்ரா), அர்க்குரஸ் (ஸ்வாதி), பொலரிஸ் (துருவா) என பெயரிடப்பட்டுள்ளன. சூரியனுக்கு அடுத்து, புவிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆல்பா சென்சுரி (Alpha Centauri) ஆகும். 

வடிவ விண்மீன் குழுக்கள் (Constellations): 

பெரும்பாலான விண்மீன்கள், வானத்தில் குழுக்களாக ஒன்று சேர்ந்து விலங்குகள் அல்லது மனிதர்கள் வடிவத்தில் அமைந்துள்ளன. இந்த குழுக்களை வடிவ விண்மீன் குழுக்கள் எனலாம். வானத்தில் தெரியும் விண்மீன்கள் 88 வடிவ விண்மீன் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 


தெளிவான, நிலவற்ற வடக்கு வானில், கரடியின் (Bear) வடிவத்தில் ஏழு பொலிவு விண்மீன்கள் சேர்ந்த குழுவை, ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் காணலாம். இக்குழுவில் நான்கு விண்மீன்கள் கரடியின் உடலின் நான்கு மூலைகளிலும், மூன்று விண்மீன்கள் அதன் வால் பகுதியிலும் மற்ற சில மங்கலான விண்மீன்கள் கால் பாதங்களிலும் தலையிலும் இருப்பது போல் உள்ளன. இக்குழு உர்ஸா மேஜர் (Ursa Major) அல்லது சப்தரிஷி அல்லது பெரிய கரடி (Great Bear) என அழைக்கப்படுகிறது. ஓரியான் (Orion) என்ற விண்மீன்குழு வேடன் வடிவத்திலும், தரூஸ் (ரிஷபம்) என்ற விண்மீன்குழு காளைமாடு வடிவத்திலும் உள்ளன. 

விண்மீன் திரள்(Galaxy): 

ஈர்ப்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும், புழுதித்துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை விண்மீன் திரள் என்கிறோம். விண்மீன் திரள்கள் என்பவை, இயற்கையில் பல பில்லியன் விண்மீன்களைக் கொண்ட கூட்டமைப்பாகும். சில விண்மீன் திரள்கள், வெளிவிடும் மொத்தக் கதிர்வீச்சில் குறைந்த அளவே ரேடியோக் கதிர்வீச்சுக்கள் இருக்கும். அவற்றை இயல்பு விண்மீன் திரள்கள் எனலாம். 


நமக்கு மிக அருகில் உள்ள ஆண்ட்ரோமடா (Andromeda) விண்மீன் திரளும் ஒரு இயல்பு விண்மீன் திரளே ஆகும். 

இது 2 × 10^6 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. (ஓராண்டில் ஒளி கடக்கும் தொலைவு 9.467 × 10^12 km ஒளி ஆண்டு எனப்படும்). சில விண்மீன் திரள்கள், இயல்பு விண்மீன் திரள்களுடன் ஒப்பிடும்போது மில்லியன்கள் மடங்கு ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. 

பால்வழி விண்மீன் திரள்(Milky Way Galaxy): 

வானத்தின் குறுக்கே பால் நீரோட்டம் போன்று பால்வழி விண்மீன் திரள் தெரிகிறது. பால்வழி விண்மீன் திரள் என்ற நமது விண்மீன் திரள், சுருள் வடிவத்தில் இருக்கும் இயல்பு விண்மீன் திரளாகும். 

i) வடிவமும் அளவும் 

பால்வழி விண்மீன் திரள், மையத்தில் தடித்தும் விளிம்புகளில் மெலிந்தும் காணப்படுகிறது. இதன் விட்டம் 10^5 ஒளி ஆண்டுகள் ஆகும். 

இதன் தடிமன் மையத்தில் 5000 ஒளி ஆண்டுகளாகவும் சூரியன் இருக்குமிடத்தில் 1000 ஒளி ஆண்டுகளாகவும் விளிம்புகளில் 500 ஒளி ஆண்டுகளாகவும் இருக்கிறது. திரளின் மையத்திலிருந்து சூரியன், 27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.



ii) விண்மீன் ஊடு பருப்பொருள்(Interstellar matter): 

பால்வழி விண்மீன் திரளில், விண்மீன் ஊடு வெளியில் நிரம்பியுள்ள புழுதித் துகள்களும் வாயுக்களும் விண்மீன் ஊடு பருப்பொருள் எனப்படும். இப்பருப் பொருளில் சுமார் 90% ஹைடிரஜன் உள்ளது. 

iii) விண்மீன் கொத்துக்கள் (Clusters): 

பரிமாற்று ஈர்ப்பு விசையின் காரணமாக, விண்மீன் திரளிலுள்ள விண்மீன்கள் ஒன்றிணைந்து கூட்டமாக உள்ளதை விண்மீன் கொத்துக்கள் எனலாம். விண்மீன் கொத்து ஒன்று, விண்மீன் திரளில் ஒன்றிணைந்த அமைப்பாகவே இயங்குகிறது. 100 முதல் 1000 விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை திரளியல் விண்மீன் கொத்து (Galactic cluster) எனலாம். 10000 விண்மீன்கள் இருக்கும் கூட்டம் சிறுகோள் விண்மீன் கொத்து (Globular cluster) எனப்படும். 


iv)சுழற்சி: 

மையத்தின் வழியே செல்லும் அச்சைப்பற்றி விண்மீன் திரள் சுழல்கிறது. பால்வழி விண்மீன் திரளில் உள்ள அனைத்து விண்மீன்களுமே மையத்தை, சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் சுற்றி வருகின்றன. 

பல விண்மீன்களில் ஒன்றான நமது சூரியன், 250 km/s திசைவேகத்தில் சுமார் 220 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பால்வழித் திரளின் மையத்தைச் சுற்றிவருகிறது. 


v) நிறை 

பால்வழி விண்மீன் திரளின் நிறை சுமார் 3 x 10^41 kg எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

Download PDF for full content

Universe(பிரபஞ்சம்) முழுமையான PDF ஐ பெற 


No comments:

Post a Comment

Direct link: http://www.onclickmega.com/jump/next.php?r=3088491